கழகக் களத்தில்…!

2 Min Read
- Advertisement -

12.11.2026 வியாழக்கிழமை
செம்மங்குப்பம் மதுக்கரை செ.சித்ராவின் நினைவேந்தல் – படத்திறப்பு

செம்மங்குப்பம்: காலை 11 மணி *இடம்: சா.செந்தில்நாதன் இல்லம், மதுக்கரை, செம்மங்குப்பம் *வரவேற்புரை: மு.விநாயகமூர்த்தி *தலைமை: தென்.சிவக்குமார் (மாநகர கழகத் தலைவர்) *முன்னிலை: சொ.தண்டபாணி (மாவட்ட கழகத் தலைவர்), க.எழிலேந்தி (மாவட்டச் செயலாளர்) *படத்திறப்பு நினைவுரை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), ஜெயசிங், அரங்க.பன்னீர்செல்வம், சு.இராவணன் *நன்றியுரை: செ.அறிவுச்செல்வம், செ.அன்புமதி *இவண்: சா.செந்தில்நாதன்.

14.11.2026 சனிக்கிழமை
திருநெல்வேலி, தென்காசி மாவட்ட
கழகக் கலந்துறவாடல் கூட்டம்

திருநெல்வேலி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மய்யம், கீர்த்தி மெட்டல், தச்சநல்லூர், சங்கரன்கோவில் சாலை, திருநெல்வேலி *வரவேற்புரை: மாரி.கணேசு (மாவட்ட துணைச் செயலாளர்) *தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (காப்பாளர்) *முன்னிலை: இரா.காசி (காப்பாளர்), சி.வேலாயுதம் (காப்பாளர்) *செயலாக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்) *கருத்துரை: கே.டி.சி. குருசாமி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), ஆலடி.எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்), மு.தமிழ்செல்வன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பொருள்: தமிழர் தலைவரின் 94ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, நவம்பர் 22 தமிழர் தலைவர் குற்றாலம் வருகை, தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயலாக்குதல் *வேண்டல்: அனைத்து தோழர்களும் குறித்த நேரத்தில் பங்கேற்க வேண்டுகிறோம் *நன்றியுரை: அ.சவுந்திரபாண்டியன் (மாவட்ட துணைச் செயலாளர்) *அன்புடன்: ச.இராசேந்திரன் (மாவட்டக் கழக தலைவர், திருநெல்வேலி), வழக்குரைஞர் த.வீரன் (மாவட்டக் கழகத் தலைவர், தென்காசி), இரா.வேல்முருகன் (மாவட்டச் செயலாளர், திருநெல்வேலி), கை.சண்முகம் (மாவட்டச் செயலாளர், தென்காசி *ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், திருநெல்வேலி, தென்காசி.

திராவிட மாணவர் கழகம் நடத்தும்
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம்

சேந்தநாடு: மாலை 3 மணி *இடம்: சுயமரியாதைச் சுடரொளி வை.சு.அரங்கநாதன் திடல், சேந்தநாடு *தலைமை: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர் திராவிட மாணவர் கழகம்) *வரவேற்புரை: ய.இன்பதமிழன் (மாவட்ட மாணவர் கழகம்) *இணைப்புரை: த.பகவான்தாஸ் (பகுத்தறிவாளர் கழகம்) *முன்னிலை: அரங்க.பரணிதரன் (மாவட்ட கழகத் தலைவர்), ஏ.ரமேஷ் (மாவட்டச் செயலாளர்) *தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழக செயலாளர்) *தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து உரை: ஜி.ஆர்.வசந்தவேல் (உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்)  *குறிப்பு: மாலை 3 மணிக்கு திண்டுக்கல் ஈட்டி கணேசன் வழங்கும் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்சசி நடைபெறும் *நன்றியுரை: இரா.சரண் (மாவட்ட திராவிட மாணவர் கழகச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், விழுப்புரம் மாவட்டம்.

15.11.2026 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா

அலமேலுரங்காபுரம்: காலை 7.30 மணி *இடம்: ஜி.எஸ்.மகால், அலமேலுரங்காபுரம்*மணமக்கள்: வீ.தமிழ்ச்செல்வன்-வே.அஸ்வினி *வரவேற்புரை: கு.இளங்கோவன் *முன்னிலை: எஸ்.பி.இராஜகோபால்-சகுந்தலா, இரா.கணேசன்-கனகா *தலைமையேற்று நடத்துபவர்: முனைவர் துரை.சந்திரசேகரன (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *வாழ்த்துரை: சி.ஞானசேகரன் (சட்ட திட்டக்குழு இணைச் செயலாளர், திமுக) *நன்றியுரை: ஆர்.வேலு.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *