இந்தியன் வங்கியில் காலிப் பணியிடங்கள்!

1 Min Read
- Advertisement -

2026–2027 நிதியாண்டிற்கான 1,500 பயிற்சிப் பணியிடங்களுக்கான (தமிழ்நாட்டில் உள்ள 270 காலிப்பணியிடங்கள் உட்பட) அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்தியன் வங்கி (Indian Bank) வெளியிட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிப்பது எப்படி? என்ற விவரங்கள் பின்வருமாறு:

நிறுவனம்: இந்தியன் வங்கி

பயிற்சி பணி இடங்கள்: 1,500 (அப்ரண்டீஸ் பயிற்சிப் பணி). தமிழ்நாட்டில் 270 இடங்கள்.

பயிற்சி காலம்: ஒரு ஆண்டு

கல்வி தகுதி: 1.4.2022-க்கு பிறகு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள். 1.11.2026-க்குள் இறுதி தேர்வு மதிப்பெண்கள் வெளியாகி தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

வயது: 25.11.2026 அன்றைய தேதிப்படி குறைந்தபட்ச வயது 20; அதிகபட்ச வயது 28. அரசு விதிமுறைகளின்படி 3 முதல் 15 ஆண்டுகள் வரை வயது தளர்வு உண்டு. (மாற்றுத்திறனாளிகள் உள்பட)

ஊக்கத்தொகை (மாதம்): மெட்ரோ/நகர்ப்புறம்-ரூ.15,000, புறநகர்/கிராமப்புறம்-ரூ.12,300

தேர்வு முறை: இணைய வழித் தேர்வு, உள்ளூர் மொழித்தேர்வு

விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.11.2026

இணையதள முகவரி: https://indianbank.bank.in/en/career

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *