மதுரை, நவ.11 திருச்செந்தூர் ஆதித்த னார் கல்லூரியின் மேனாள் ஆங்கி லத்துறைத் தலைவர் பேரா. கி. ஆழ்வார், புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் ‘இசை யமுது’ கவிதைத் தொகுப்பினை ‘’Nectar Of Music ‘ என்னும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தி ருக்கிறார். அந்த மொழிபெயர்ப்பு நூல் அறிமுக விழா மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் உள்ள அய்.ஜி.எஸ்.ஆர். அரங்கத்தில் 31.10.2026 அன்று காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற்றது.
பேரா கி.ஆழ்வாரின் மூத்த மகன் ஆ.பரணீதரன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார். நிகழ்விற்கு முனைவர் வா.நேரு தலைமை தாங்கினார். நிகழ்வில் 90 வயதுடைய பேரா கி.ஆழ்வார், அவரது இணையர் சரோஜா ஆகியோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடி சுப்பையா வித்தியாலாயா மேல்நிலைப்பள்ளியின் மேனாள் ஆசிரியர் உஷா பாலகிருஷ்ணன்,மதுரை காந்திய சிந்தனைக் கல்லூரியின் மதிப்புறு இயக்குநர் முனைவர் சு.ஆண்டியப்பன்,மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் செயலாளர் கே.ஆர். நந்தாராவ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
தொடர்ந்து ஆண்டிப்பட்டி – தேனி தி லிட்டில் ஃப்ளவர் பள்ளிகளின் தாளாளர், எ.ஹென்றி அருளானந்தம் சிறப்புரை வழங்கினார்.அதில் தான் எழுதிய பேரா.கி.ஆழ்வார் பற்றிய ஆங்கிலக் கவிதையை அரங்கில் வாசித்தார். ‘‘இன்றைக்கு இருக்கும் எழுத்தா ளர்களும், பேச்சாளர்களும் திராவிட இயக்கத்திற்கு நன்றி சொல்லவேண்டும்.அந்த இயக்கத்தால்தான் நாம் பதவி பெற்றோம்’’ பணிகள் பெற்றோம் என்று சொல்லி,மொழி பெயர்ப்பு நூலின் சிறப்புகளை அரங்கில் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து மதுரை சி.இ.ஓ.ஏ. (CEOA) கல்விக் குழுமத்தின் நிறு வனத் தலைவர் முனைவர் எம்.இராசா கிளைமேக்சு தான் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் 1971-1975 காலகட்டத்தில் படித்ததையும், ஆழ்வார் அவர்கள் கற்பித்த ஆங்கிலம் இன்றைக்குவரை தனக்கு உதவுவதாகக் குறிப்பிட்டார். தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டு ஆழ்வார் அவர்கள் மொழிபெயர்த்த நூலின் சிறப்புகளைக் குறிப்பிட்டு,இனி மேல் மொழி பெயர்ப்பு செய்பவர்களுக்கு ஒரு மாதிரி நூலாக(Reference book) இந்த ‘Nectar of Music ‘ நூல் இருக்கிறது என்று பாராட்டி னார். தமிழ் மற்றும் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் சிறப்புகளைக் குறிப்பிட்டு உரையாற்றினார்..
தொடர்ந்து சிறப்புரையாற்றிய திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்(பொறுப்பு ) முனைவர் ச.பிரபாகரன், மொழி பெயர்ப்பு நூலான Nectar Of Music என்னும் நூலின் சிறப்புகளைப் பட்டியலிட்டு உரையாற்றினார். ‘‘நான் மொழி பெயர்த்து இருந்தால் எப்படி இந்த நூலை மொழிபெயர்த்து இருப்பேன் என்று சில வரிகளை மொழி பெயர்த்துப் பார்த்தேன். அவர் ஒரு வரியில் மொழி பெயர்த்திருப்பதை நான் மொழி பெயர்த்திருந்தால் பல வரிகள் செலவழித்திருப்பேன். அப்படி ஓர் அருமையான மொழிபெயர்ப்பாக இந்த ‘Nectar of Music’ நூல் இருக்கிறது’’ என்று குறிப்பிட்டு, தான் ஆதித்தனார் கல்லூரியில் பயின்ற காலத்தில், தனக்கும் பேரா ஆழ்வார் அவர்களுக்கும் இருந்த உறவு பற்றியும், பேரா.ஆழ்வார், பெரியாரிஸ்ட் என்பதையும், தான் கல்லூரி மாணவராகக் கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றபோது தன்னைக் கட்டியணைத்து பேரா. ஆழ்வார் பாராட்டியது இன்னும் என் நினைவுகளில் இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். ஆங்கிலக் கவிஞர்கள் ஷெல்லி,மில்டன் ஆகி யோரோடு கவிஞர் பாரதிதாசன் அவர்களை ஒப்பிட்டுப் பேசினார். இந்த மொழி பெயர்ப்பினை எவ்வ ளவு ஈடுபாட்டோடும், நடுநிலை யோடும் பேரா.ஆழ்வார் மொழி பெயர்த்திருக்கிறார் என்பதையும் குறிப்பிட்டு ஏறத்தாழ முக்கால்மணி நேரம் நிறைவுரையாற்றினார்.
நிகழ்வில் பேரா கி.ஆழ்வார் ஏற்பு ரையாற்றினார். பாரதிதாசன் கவிதைகள் தனது இளமைக்காலம் முதல் மீண்டும் மீண்டும் படித்த, மனதில் பதிந்த கவிதைகள் என்றார்.எனவே அதனை மொழிபெயர்த்தேன். தான் 1983 இல் பெரியார் பட்டயச்சான்றிதழ் பெற்ற தையும், தான் பெரியாரியக் கொள்கை வழி வாழ்பவர் என்பதில் பெருமையும் கொள்கிறேன் என்று உரையாற்றினார்.
மதுரை யாதவர் கல்லூரியின் மேனாள் ஆங்கிலத்துறைத் தலைவர் டாக்டர் சண்முகைய்யா, ,ஆதித்தனார் கல்லூரியின் மேனாள் மாணவர் அய்யாத்துரை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாகச் சே.கணபதிராஜா நன்றியுரையாற்றினார்..திருச்செந்தூர் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.மதுரை கழகக் காப்பாளர் சே.முனியசாமி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகா னந்தம்,மாவட்டச் செயலாளர் இரா.அழகுபாண்டி,போட்டோ இராதா,பா.சடகோபன், பெரி.காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
