காவேரிப்பட்டணம் பையூரில் சுயமரியாதைச் சுடரொளி தமிழ்ச்செல்வி நினைவேந்தல் – படத்திறப்பு! கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்று படத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார்!

5 Min Read
- Advertisement -

கிருட்டினகிரி, நவ. 11 கிருட்டினகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றி யம், பையூரில் சுயமரியாதைச் சுடரொளி தமிழ்ச்செல்வியின் நினைவேந்தல்- படத்திறப்பு நிகழ்ச்சி கடந்த 7.11.2026 அன்று நடைபெற்றது.

தருமபுரி – கிருட்டினகிரி ஒருங்கி ணைந்த மாவட்ட திராவிடர் கழக முன்னாள் செயலாளரும், கிருட்டினகிரி மாவட்ட முன்னாள் தலைவருமான பையூர் பெ.மதிமணியனின் வாழ்வி ணையர் தமிழ்ச்செல்வி, 27.10.2026 அன்று மறைவுற்றார்.

அவரது நினைவேந்தல்– படத்திறப்பு நிகழ்ச்சி 7.11.2026 அன்று காலை 11.30 மணியளவில் பையூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழகம்

இந்நிகழ்ச்சிக்குக் கிருட்டினகிரி மாவட்டக்  கழகத் தலைவர் கோ.திரா விடமணி தலைமை வகித்தார். காவே ரிப்பட்டணம் ஒன்றியச் செயலாளர் பெ.செல்வேந்திரன் அனைவரையும் வரவேற்றார். மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, மாவட்டத் துணைத் தலைவர்கள் தி.கதிரவன், வ.ஆறுமுகம், மாவட்டத் துணைச் செயலாளர் சி.சீனிவாசன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தா.சுப்பிரமணியம், ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கழகப் பொதுச்செயலாளர் நினைவுரை!

கழகப் பொதுச்செயலாளர் முனைவர் வீ.அன்புராஜ் அவர்கள், சுயமரியாதைச் சுடரொளி தமிழ்ச்செல்வியின் படத்தைத் திறந்து வைத்து நினைவேந்தல் நிறைவு ரையாற்றினார்.

அவரது நிறைவுரை வருமாறு:

‘‘ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தில் மாவட்ட இளைஞரணித் தலைவர், செயலாளர், மாவட்டக் கழகச் செயலாளர், கிருட்டினகிரி மாவட்டச் செயலாளர், தலைவர் எனக் கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துத் திறம்படச் செயலாற்றியவர் மதிமணியன் அவர்கள். அவர் சிறப்பாகச் செயல்பட சுயமரியாதைச் சுடரொளி தமிழ்ச்செல்வி அவர்கள் முழு ஒத்து ழைப்பையும் வழங்கியதால்தான், தமிழர் தலைவரின் பெரும் நம்பிக்கை யைப் பெற்று, மாவட்டத்தில் கொள்கை உறுதிமிக்கவராகவும், கழகக் கொள்கைகளைப் பரப்பும் களப்பணி யைச் சிறப்பாகச் செய்பவராகவும் மதிமணியன் திகழ்ந்துள்ளார்.

திராவிடர் கழகம்

அவரது செல்வங்கள் அன்புச் செல்வன் திருமணத்தை கழகத் துணைத் தலைவர் கவிஞர் அவர்களும், திலீபன் திருமணத்தை ஆசிரியர் அவர்களும் தலைமை ஏற்று நடத்தி வைத்துள்ளனர்’’ என்று கூறினார்.

இந்நிகழ்வில் உரையாற்றிய தி.மு.க. வைச் சேர்ந்த இளையராஜா, அண்ணா சரவணன், அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரவி ஆகியோர் கூறிய கருத்துகளை எடுத்துக்காட்டி, சிறுவயது முதலே கழகக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு சிறப்பாகச் செய லாற்றி வருபவர் மதிமணியன் என்றும்,  கழகப் பணிகளைச் செய்ய அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தமிழ்ச்செல்வி என்றும் நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

கழகத் தலைவரின் ஆறுதல்!

கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், மதிமணியனுடன் தொடர்புகொண்டு தனது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார்.

பெ.மதிமணியனுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆறுதல் தெரிவித்து அனுப்பிய கடிதத்தை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன் நிகழ்வில் படித்தார்.

மாநில ஒருங்கிணைப்பாளர்
ஊ. ஜெயராமன், பகுத்தறிவாளர் கழக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் அண்ணா சரவணன், மாநிலக் கலைத்துறைச் செயலாளர் மாரி.கருணாநிதி, கழகக் காப்பாளர்கள் சேலம் பழனி. புள்ளையண்ணன், பென்னாகரம் கடமடை அ.தீர்த்தகிரி, மாவட்டத் தலைவர்கள் திருப்பத்தூர் கே.சி.எழிலரசன், ஓசூர் சு.வனவேந்தன், அரூர்  அ.தமிழ்ச்செல்வன், தருமபுரி பீம.தமிழ் பிரபாகரன், சேலம் வீரமணி ராஜ், தி.மு.க. பேச்சாளர் பையூர் இளையராஜா, அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் பையூர் பி.இரவி, ஆம் ஆத்மி மாவட்டச் செய லாளர் அசோகன், பையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் விஜயகுமார், அரிமா சங்கத் துணை ஆளுநர் மரு.வேடியப்பன் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றினர்.

பங்கேற்றோர்!

இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் தருமபுரி க.கதிர், மாநிலப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அண்ணாதுரை, மாநில மகளிரணித் துணைச் செயலாளர் மு.இந்திராகாந்தி, மாநில இளைஞரணித் துணைச் செயலாளர் மா.செல்லதுரை, மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் ச.மணிமொழி, முன்னாள் மாவட்டத் தலைவர் த.அறிவரசன், முன்னாள் மாவட்டச் செயலாளர் கா.மாணிக்கம், சேலம் மாவட்ட முன்னாள் செயலாளர் சி.பூபதி, கிருட்டினகிரி பொதுக்குழு உறுப்பினர்கள் இல.ஆறுமுகம், கி.முருகேசன், திருப்பத்தூர் மாவட்டக் கழகச் செயலாளர் பெ.கலைவாணன், பொதுக்குழு உறுப்பினர்கள் கந்திலி கனகராஜ், சோலையார்பேட்டை இராசேந்திரன், ஓமலூர் சவுந்தரராசன், மாவட்ட இளைஞரணித் தலைவர் சீனிமுத்து. இராஜேசன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.சிலம்பரசன், துணைத் தலைவர் வெ.புகழேந்தி, துணைச் செயலாளர் பூ.இராசேந்திரபாபு, மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் ச.கிருட்டினன், துணைத் தலைவர் மு.வேடியப்பன், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் துணைச் செயலாளர் மா.சிவசங்கர், மாவட்ட மகளிரணி நிர்வாகிகள் உண்ணாமலை, மா.சிவசக்தி, மத்தூர் ஒன்றியத் தலை வர் சா.தனஞ்செயன், செயலாளர் வி.திருமாறன், கிருட்டினகிரி நகரத் தலைவர் கோ.தங்கராசர், நகரச் செய லாளர் அ.கோ.இராசா, பர்கூர் ஒன்றியச் செயலாளர் ப.பிரதாப், போச்சம்பள்ளி கா.ஞானசேகரன், புலியாண்டூர் சி.இராசா, கீழ்குப்பம் மா.சீவரத்தினம், அகரம் நா.சதீஷ்குமார்,

பையூர் கிளைச் செயலாளர் வி.சரவணன், தமிழரசன், சி.லோகேஷ், இராமாபுரம் மு.இரஞ்சித், மு.புகழேந்தி, ஊற்றங்கரை ஒன்றியத் துணைத் தலைவர் காரப்பட்டு ப.இரமேசு, தரும புரி முன்னாள் மண்டலச் செயலாளர் கரு.பாலன், தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் கதிர்.செந்தில், மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இர.கிருட்டினமூர்த்தி, தருமபுரி முன்னாள் மாவட்டத் தலைவர்கள் இ.மாதன், மு.பரமசிவம், சென்னை த.ஆனந்தன், தருமபுரி தொழிலாளரணி மாவட்டத் தலைவர் மு.சிசுபாலன், அரூர் மாவட்டப் பகுத்த றிவாளர் கழக நிர்வாகிகள் ஆசிரியர் தீ.சிவாஜி, பிரபாகரன், காமலாபுரம் இரா.சின்னசாமி, இராமசாமி, நாகஜோதி,

பெங்களூரு திராவிடர் கழகத்தைச் சேர்ந்த இரா.இராசா, தேவிகா, பெரியார் பெருந்தொண்டர்கள் பாலக்கோடு நல்.கோபால், பாப்பாரப்பட்டி சுந்தரம், முல்லை மதிவாணன், மாரண்டஅள்ளி கி.அறிவுடைநம்பி, சென்னை துரை.இராவணன், திருப்பத்தூர் ஒளிப்படக் கலைஞர் முருகன், தருமபுரி மாணவர் கழக ச.கி.வீரமணி, கிருட்டினகிரி மாணவர் கழக செ.வீரபாண்டி, ச.அகரன், தி.அ.அனலரசு, தி.அ.அறிவுக்கனல், சி.இனியன், ஓட்டுநர் சுரேசு, காவே ரிப்பட்டணம் வட்டார காங்கிரஸ் தலைவர் போத்தாபுரம் கிருஷ்ணன், பையூர் ஊராட்சி முன்னாள் தலை வர்கள் இளங்கோவன், தங்கராசு, ஒன்றியக்குழு முன்னாள் உறுப்பினர் க.தமிழ்ச்செல்வன், எம்.பரத், சிற்றரசு, வனத்துறை ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் ஜி.பெருமாள் உள்ளிட்ட சேலம், தருமபுரி, அரூர், திருப்பத்தூர், மேட்டூர், ஓசூர் ஆகிய கழக மாவட்டங்களின் பொறுப்பாளர்களும், தோழர்களும், அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் பெருமளவில் கலந்துகொண்டனர்.

பெரியார் உலக நிதி!

நிகழ்வில் தருமபுரி மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் இர.கிருட்டினமூர்த்தி, பெரியார் உலக நிதியாக ரூ.500/-அய் கழகப் பொதுச்செயலாளரிடம் வழங்கினார்.

நிகழ்வின் நிறைவாக அனைவரும் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அமைதி காத்தனர்.

குடும்பத்தினர் சார்பில் அவரது மகன் வழக்குரைஞர் சு.அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

சுயமரியாதைச் சுடரொளி தமிழ்ச்செல்வி நினைவாகக் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மரக்கன்று நட்டார்.

முன்னதாக, பையூருக்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணி தலை மையில் கழகத் தோழர்கள் வரவேற்றனர்.

முன்னதாக, 07.11.2026 அன்று காலை 10 மணிக்கு மொரப்பூர் இரயில் நிலையத்திற்கு வருகை தந்த கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களை மாநில ஒருங்கிணைப்பாளர் ஊ.ஜெயராமன், மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, தருமபுரி மாவட்டத் தலைவர் பீம.தமிழ் பிரபாகரன், திருப்பத்தூர் முருகன் ஆகியோர் வரவேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *