வடமணப்பாக்கம், செப். 15- திருவண்ணா மலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 11.9.2026 பிற்பகல் 3 மணி அளவில் தந்தை பெரியார் பற்றிய பேச்சுப்போட்டி ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் நா. ராமு தலைமையில் நடை பெற்றது.
மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் வி.வெங்கட்ராமன் வரவேற் புரையாற்ற, செய்யாறு நகர திராவிடர் கழகத் தலைவர் தி.காமராசன் முன்னிலை வகித்து பேசினார். காஞ்சி நாத்திகம் நாகராசன் சிறப்புரை ஆற்றுகையில் கல்வியால் மட்டுமே மாணவர்கள் உயர்நிலை அடைய முடியும் பல் வேறு திறமைகளை பெற்றால் தான் நாம் உயர்வோம் நாடும் வளரும் எனவும் அறிவியல் மனப் பான்மையை வளர்த்துக் கொள்வோம், மூடப் பழக்க வழக்கங்களை ஒழித்து பகுத்தறிவு சிந்த னையோடு வாழ்வோம் என பல்வேறு மாணவர் முன்னேற்ற கருத்துகளை விளக்கிப் பேசினார்.
உதவித் தலைமை ஆசிரியர் செல்வம் நன்றி கூறினார். தந்தை பெரியார் பேச்சுப் போட்டியில் வகுப்பு வாரியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப்பரிசு நோட்டுப் புத்தகங்கள் எழுது பொருட்கள் வேதவள்ளி- விஜயராகவன் அறக்கட் டளை வழங்கிச் சிறப் பித்தது.
