தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில், ரயில் நிலையங்களில் மீண்டும் ஹிந்தியா?

1 Min Read
- Advertisement -

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தேசிய நெடுஞ்சாலைகளிலும் எல்லைக் கற்கள் நடும் பணியும், பழைய எல்லைக் கற்களில் வாசகங்களைப் புதுப்பிக்கும் பணியும் தொடங்கியுள்ளதாகவும், அவற்றில் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாமல், ஹிந்தியும் திணிக்கப்படுவதாகவும் படத்துடன் செய்தி வெளிவந்துள்ளது!
முதல் கட்டமாக தஞ்சை, சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இப்பணி நடந்து வருகிறதாம். தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வகையில், ஒன்றிய பா.ஜ.க அரசு, ஹிந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் தீவிரமாக இறங்கி வருகிறது.
அதேபோல, ரயில் நிலையங்களிலும் பெரிய எழுத்துகளில் மய்யப் பகுதிகளில் தமிழ் இடம்பெற்றிருந்ததற்கு மாறாக, அந்த இடத்தை ஹிந்தியில் எழுதத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதுகுறித்து ஏற்கெனவே திராவிடர் கழகமும், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பி னர்களும் கண்டனம் தெரிவித்தும், நிலைமை இன்னும் மாறவில்லை.
ஹிந்தி எழுத்துகளை அழிக்க மீண்டும் தார்ச் சட்டியை எடுக்கவேண்டிய அவசியம் எழுகிறதா?

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *