பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமும் – திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றமும் இணைந்து நடத்திய மரக்கன்றுகள் நடும் விழா!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வல்லம், டிச. 7 – தஞ்சாவூர் மாவட்டம், திருக்கானூர்பட்டி கிராமம், தேவாரம் நகர் பகுதியில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயற்பியல் துறை மற்றும் திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்றம் இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் தூய்மைப் பணி விழா 27.11.2023 அன்று நடை பெற்றது.

விழாவினை, திருக்கானூர்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஒய். சேவியர் துவங்கி வைத்தார். திருக் கானூர்பட்டி ஊராட்சி மன்ற 1ஆவது வார்டு உறுப்பினர் சி.சந் திரசேகரன் மற்றும் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன இயற்பியல் துறை பேராசிரியர்கள் முனைவர் க.கேசவன், முனைவர் த.பாக்ய ராஜ், பேரா. ஜெ.சிறீவிந்த் ஆகி யோர் விழாவினை ஒருங்கிணைத்து நடத்தினர். இயற்பியல் துறை மாணவர்கள் தேவாரம் நகர் பொதுமக்கள் மற்றும் மகளிர் கலந்து கொண்டு அப்பகுதியை தூய்மைப்படுத்தியும், மரக்கன்று களை ஊன்றியும் விழாவினை நிறைவு செய்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *