இந்தியாவில் ‘காற்று மாசு’ உயிரிழப்புகளை மறைக்கிறது மோடி அரசு ஆய்வறிக்கையை முன்வைத்து காங்கிரஸ் சாடல்

- Advertisement -

புதுடில்லி, மே 10 2023-ல் நிகழ்ந்த உயிரிழப்புகளில் சுமார் 20 லட்சம் உயிரிழப்புகள் காற்று மாசு காரணமாகவே ஏற்பட்டதாக ஃபிக்கி – இஒய் (FICCI-EY) ஆய்வு அறிக்கை தெரிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ள காங்கிரஸ் கட்சி, காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு துரித நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என்று வலியுறுத் தியுள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள சமூக ஊடகப் பதிவில், ‘நாட்டில் காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள் குறித்த உண்மையை ஒப்புக்கொள்ள மோடி அரசு நீண்டகாலமாகவே மறுத்து வருகிறது.

காற்று மாசுபாடு குறித்த பல ஆய்வுகளை, அவை இந்தி யாவுக்கான தனித்த ஆய்வுகள் அல்ல என்றும், அதன் பாதிப் புகள் நேரடியானவை அல்ல என்றும், உயிரிழப்புகள் காற்று மாசு பாட்டினால் மட்டுமே ஏற்பட்டவை என்று உறுதியாகக் கூற முடியாது என்றும் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் மோடி அரசு மறுத்து வருகிறது.

தற்போது ஃபிக்கி – இஒய் அமைப்பின் விரிவான ஆய்வு அறிக்கை, 2023-இல் நிகழ்ந்த 20 லட்சம் உயிரிழப்புகளுக்கு காற்று மாசுபாடுதான் காரணம் என்று திட்டவட்டமாகக் கூறுகிறது. மொத்த உயிரிழப்புகளில் இது 22%. ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் மோடி அரசுக்கு விடுக்கப்பட்ட மற்றொரு எச்சரிக்கை இது.

எளிதாக வணிகம் செய்வ தற்கான நடவடிக்கைகள் முக்கியமானவைதான். ஆனால், எளிதாக சுவாசிப்பதற்கு ஏற்ற சுற்றுச்சூழலை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் அதைவிட மிக முக்கியமான, அடிப்படையான ஒன்று. இந்தியாவின் பல பகுதிகளில் காற்றில் கலந்துள்ள பி.எம்.2.5 (PM 2.5) துகள்கள் ஒரு கொடிய காரணியாக மாறியுள்ளன.

சுற்றுச்சூழலை மேம்படுத்து வதற்கான 10 ஆண்டு கால தெளிவான வரைபடத்தை ஃபிக்கி – இஒய் அமைப்பு முன்வைக்கிறது. முதலாவதாக, தற்போதுள்ள பி.எம்.2.5 மற்றும் ஓசோன் தரநிலைகளை, உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் பாதுகாப்பு அளவுகளுக்கு ஏற்ப கடுமையான சீர்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, தேசிய தூய்மையான காற்று திட்டத்தை மறுசீரமைத்து, அதில் பி.எம்.2.5 மற்றும் ஓசோன் மாசுபாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மூன்றாவதாக, காற்று மாசுபாடு குறித்த ஆதாரங்கள் மற்றும் பொது சுகாதாரத்தின் மீதான அதன் பாதிப்புகள் குறித்து தற்போது ஏராளமான புதிய தகவல்கள் கிடைத்துள்ள நிலையில், 1981-ஆம் ஆண்டின் காற்று மாசு தடுப்புச் சட்டத்துக்கு மாற்றாக, புதிய தூய்மையான காற்றுச் சட்டத்தை கொண்டுவர வேண்டும்.

நீண்ட மற்றும் சிறப்பான வரலாற்றைக் கொண்ட ஃபிக்கி – இஒய் அமைப்பு முன்வைத்துள்ள இந்த ஆய்வை, மோடி அரசால் நிச்சயமாக புறக்கணிக்க முடியாது’ என தெரிவித்துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *