அரசுப் பணியாளர்கள் 48 மணி நேரம் காவலில் இருந்தால் இடை நீக்கமாகக் கருதப்படும் – உச்ச நீதிமன்றம் கருத்து

- Advertisement -

புதுடில்லி, நவ 10- பீகார் மாநிலம் சமஷ்டிபூரில் அரசுக்கு சொந்தமான சாதர் மருத்துவமனையின் நிர்வாகி யாக இருப்பவர் விஷ்வஜீத் சிங். அவர் அந்த மருத்துவமனையில் ஓர் ஒப்பந்த ஊழியரின் ஊதிய நிலுவைத் தொகையான ரூ.36 ஆயிரத்துக்கு ஒப்புதல் அளிக்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

இதுதொடரபாக அந்த ஊழியர் அளித்த புகாரின்பேரில் விஷ்வஜீத் சிங் கடந்த ஆண்டு கைது செய்யப் பட்டார். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தார். பின்னர், செசன்சு நீதிமன்றத்தில் அவருக்கு பிணை அளித்தது. பிணை உத்தரவை எதிர்த்து, பாட்னா நீதிமன்றத்தில் ஒப்பந்த ஊழியர் மேல்முறையீடு செய்தார். அதன்பேரில், கடந்த ஜூலை 1ஆம் தேதி அவரது பிணையை உயர்நீதி மன்றத்தில் ரத்து செய்தது.

அந்த உத்தரவை எதிர்த்து விஷ்வஜீத் சிங் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அம்மனு மீதான விசாரணைக்கு பிறகு, நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மன் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, விஷ்வஜீத்துக்கு மீண்டும் பிணை வழங்கியதுடன், பாட்னா உயர்நீதி மன்ற உத்தரவை ரத்து செய்தது.

நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி யிருப்பதாவது குற்றம் சாட்டப்பட்ட விஷ்வஜீத் சிங், பிணையில் விடுதலை செய்யப்பட்டு ஓராண்டுக்கு பிறகு பாட்னா உயர்நீதிமன்றம் தலை யிட்டுள்ளது. லஞ்சத்தொகை சிறியது என்று செசன்சு நீதிமன்றம் கூறியது, உயர்நீதிமன்றத்தின் கருத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியது தெரிகிறது.

கேட்கப்பட்ட லஞ்சத்தொகை எவ்வளவு என்பது பிணை மனுவைத் தீர்மானிப்பதற்கு பொருத்தமற்றது. இருப்பினும் பிணையை ரத்து செய்யாமல் உயர்நீதிமன்றம் அந்த கருத்தை தெரிவித்து இருக்கலாம். பொதுவாக இத்தகைய வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் எவ்வளவு தண்டனை கிடைக்கும் என்று பார்த்து பிணை வழங்கப்பட வேண்டும். குற்றப்பின்னணியோ குற்றம் கடுமையாகவோ இருந்தால் பிணை வழங்க மறுக்கலாம். இவ்வழக்கில் ஒரு கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், குற்றம்சாட்டப்பட்ட விஷ்வஜீத் சிங்கின் பணிநிலை மற்றும் மறுநியமனம்தான்.

கைது செய்யப்பட்ட பிறகு அவர் 15 நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் இருந்ததாக தெரிகிறது. ஓர் அரசு ஊழியர் கைது செய்யப்பட்டு, 48 மணி நேரத்துக்கு மேல் நீதிமன்ற காவலில் இருந்தால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகக் கருதப்படும். அதற்கென தனியாக உத்தரவு பிறப்பிக்கத் தேவையில்லை. விஷ்வஜீத் சிங் முதலில் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பிறகு அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதே மருத்துவமனையில் அதே பதவியில் நியமிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விஷயத்தில் மாநில அரசு விரைவில் கவனம் செலுத்தி, சட்டத்துக்குட்பட்டு தேவையானதைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *