சென்னை, நவ.10- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 2026 தேர்வுக்காக மொத்தம் 14,89,025 பேர் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரப் பூர்வமாகத் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நவம்பர் 6-ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிவடைய இருந்த நிலையில், அதுவரை 9 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்திருந்தனர்.
இதனைத் தொடர்ந்து தேர் வாணையம் விண்ணப்பிப்பதற்கான அவகாசத்தை நேற்று (9.11.2026) வரை நீட்டித்து உத்தரவிட்டது.
கூடுதல் அவகாசம் வழங்கப் பட்டதைத் தொடர்ந்து, மேலும் லட்சக்கணக்கான தேர்வர்கள் விண்ணப்பித்ததால் தற்போது மொத்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 14.89 லட்சமாக அதிகரித்துள்ளது.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு 14.89 லட்சம் பேர் விண்ணப்பம் அரசுப் பணியாளர் தேர்வாணையம் அதிகாரப்பூர்வத் தகவல்!
Leave a Comment
