‘‘ஸ்பாட்லைட்’’
நவீன வசதிகளில், ‘குளிர்ந்து’ போயுள்ள
ஜென்-சி இளைஞர்களே,
யார், எப்படி, எங்கு போராடியதால், உங்க ளுக்கெல்லாம் கல்வி, உத்தியோகங்களும், ‘டிப்–டாப்’ வாழ்வும் கிடைத்தன என்பதை அறிய வேண்டாமா? அவ்வியக்கம்தான் திராவிட இயக்கம். அக்கொள்கை கொண்ட ஜஸ்டிஸ் கட்சி – சுயமரியாதை இயக்கம் – திராவிடர் கழகம் – திராவிட முன்னேற்றக் கழகம் போன்றவை சமூகநீதிக்குக் களம் கண்டன.
ஒரு நூற்றாண்டுக்கு முன் நம் சமூகத்தின், ஒடுக்கப்பட்ட பார்ப்பனரல்லாதார் ‘திராவிடர் சமுதாயத்தின்’ நிலை எப்படிப்பட்டது? அடி மைத்தனத்தில், மூளையில் ஆரிய விலங்கு மாட்டப்பட்டு, பக்தி போதையில் அந்த அவ மானத்தையும் மறந்தவர்களாக இருந்தவர்களைத் தட்டியெழுப்பிய அறிவுச் சூரியன்தான் தந்தை பெரியார் என்ற சமூக விஞ்ஞானி!
100 ஆண்டுகளுக்குமுன் பழைய நிலையைச் சற்றுப் பின்னோக்கித் திரும்பிப் பார்க்கலாமா?
நாயும், கழுதையும், பன்றியும் நடமாடும் வைக்கம் கோயில் தெருக்களில், ஆறறிவு படைத்த மனிதர்கள் – தீண்டத்தகாத, பார்க்கத்தகாத, நெருங்கக்கூடாத ஜாதி என்று, நடக்கவும் உரிமை மறுத்த ஹிந்து ஸநாதனத்தின் கொடுமை, கோர முகம் எப்படி இருந்தது? சற்றே எண்ணிப் பாருங்கள்!
வைக்கம் கோயிலில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலை அன்றைய அரையணாவுக்கு (ஆறு காசுக்கு) விற்கப்பட்டது என்பது தெரியுமா?
அதே ஸநாதனம் நடத்தும் கரூர் கோயில் திருவிழாவில், பார்ப்பனர் சாப்பிட்டுத் தூக்கி எறிந்த எச்சில் இலையை வரிசையாக அடுக்கி, அதன் மீது பக்தர்கள் என்ற பக்தி போதையர் புரண்டு வரும் அசூயையான அநாகரிகத்திற்கு ஆதரவு தெரிவித்து, அய்க்கோர்ட்டின் ஆர்.எஸ்.எஸ். நீதிபதி அண்மையில் தீர்ப்பு எழுதினாரே!
திராவிடர் கழகம் இல்லாவிட்டால், அடுத்து உங்கள் கதியும், எச்சில் இலை மீது புரளுவது புண்ணியம், மோட்சம், காரிய சித்தம் என்று நம்பிடும் நிலைதானே ஏற்படும்!
பெரியார் என்ன செய்தார்? என்று குசும்பாகக் கேட்கும் ‘கூமுட்டை’களுக்குச் சொல்கிறோம்! இதை எதிர்த்துத் தடுத்து நிறுத்தும் துணிவை, தெளிவை அவர்தானே கொடுத்தார்!
தெம்புடன், மான உணர்வை நமக்கு அளித்தார்!
மறக்கலாமா பெரியாரை?
மறுக்கலாமா அவர்தம் கொள்கைப் போராட்டங்களை?
