தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம் குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு

1 Min Read
- Advertisement -

நாகர்கோவில், அக்.24- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில் ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் வைத்து திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் தலைமையில் நடை பெற்றது.

திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் குமரி மாவட்ட திராவிடர் கழக செயல்பாடுகள் குறித்தும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 94 வது பிறந்த நாளினை சிறப்பாக கொண்டாடுவதன் நோக்கங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.

காப்பாளர் ம. தயாளன், பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் உ.சிவதாணு திராவிடர் கழக மாவட்ட துணை தலைவர் ச.நல்லப் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர்.

கோட்டாறு பகுதி தலைவர் ச. ச. மணி மேகலை திராவிடர் கழக தோழர்கள் சா ச.சத்தியா ராணி மு.குமரிச் செல்வன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் திராவிடர் கழக மாவட்ட துணைச் செயலாளர் எஸ். அலெக்சாண்டர் கடவுள் மறுப்பு கூறி அனை வரையும் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர் சி.அய்சக் நியூட்டன் நன்றியுரை ஆற்றினார்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

இசையமைப்பாளர் தேனிசைத் தென்றல் தேவா திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் மா. மணியின் தந்தையார் ஆரல்வாய்மொழி மாடசாமி (எ) பழனியப்பா ஆகியோரது மறைவிற்கு கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது தமிழர் தலைவர் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94ஆவது பிறந்தநாள் விழாவினை குமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் எழுச்சியுடன் மனிதநேய பணிகள் செய்து கொண்டாடுவது எனவும் ஆசிரியர் பிறந்தநாளில் தெருமுனை கூட்டம் பொதுக்கூட்டங்கள் பள்ளிக், கல்லூரிகளில் பிரச்சாரங்கள் செய்து கொண்டாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. திராவிடர் கழக இதழ் களான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மார்டன் ரேசனலிஸ்ட் ஆகிய இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்த்து வழங்குவது எனவும் தீர்மானிக்கப்பட்டது

திருக்குறள் ஓர் அறிவுக் கழகம் என்ற சிறப்பான நூலினை எழுதிய திராவிடர் கழக மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியனுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *