ஏமன் நாட்டில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்பு!

- Advertisement -

சனா, நவ. 9- கடந்த 2 வாரங்களாக ஏமனின் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை இந்திய தூதரகம் வெற்றிகரமாக மீட்டுள்ளது.

ஈரான், சவுதி அரேபியா இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் ஏமனில் இரு நாடுகளும் மறைமுக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த சில வாரங்களாக ஏமனில் உள்நாட்டுப்போர் தீவிரமடைந்து வருகிறது. அதே வேளை, அமெரிக்கா, ஈரான் மோதலின்போது ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

சவுதி அரேபியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், விமான நிலை யங்கள் உள்பட பல்வேறு பகுதிகளை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் ஹவுதி கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் மீது ஏமன் அரசுப்படையுடன் இணைந்து சவுதியும் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்திய மாலுமிகள்

இந்த சூழலில், இந்திய மாலுமிகள் சிலர் ஏமன் நாட்டில் சிக்கித் தவித்து வருவ தாக தகவல் வெளியானது. அவர்களை பத்திரமாக மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு இந்திய தூதரகம் சார்பில் நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டன. இந்நிலையில், ஏமன் நாட்டில் சிக்கிய 19 இந்திய மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஏமன் நாட்டில் உள்ள இந்திய தூதரகம், ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-

பத்திரமாக மீட்பு

“ஏமனில் உள்ள இந்தியத் தூதரகம், கடந்த 2 வாரங்களாக ஏமனின் ஹொடைடா மற்றும் சனாவில் சிக்கித் தவித்த 19 இந்திய மாலுமிகளை வெற்றி கரமாக மீட்டுள்ளது. அனைத்து மாலுமிகளும் பாதுகாப்பாகவும், நலமாகவும் உள்ளனர்.

மேலும் அவர்கள் இந்தியாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

நமது இந்தியக் குடிமக்களைப் பாதுகாப்பாக மீட்க உதவிய சம்பந்தப்பட்ட அனைவருக்கும், அவர்களின் மதிப்புமிக்க ஒத்து ழைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவிற்காகத் தூதரகம் மனமார்ந்த நன்றியைத் தெரி வித்துக் கொள்கிறது.”

இவ்வாறு அதில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *