சென்னை, நவ. 9– தமிழ் நாட்டில் தீபாவளி பண்டிகை நாளான நேற்று (நவ.8) மட்டும் 11 கொலைச் சம்பவங்கள் நடந்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று (8.11.2026) தீபா வளி பண்டிகை கொண் டாடப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் 3 ரவுடிகள், 2 சிறுவர்கள், ஒரு இளம் பெண் உள்பட 11 பேர் படுகொலை செய்யப் பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி சமயபுரத்தில் கூலி வேலை செய்து வந்த 17 வயதான ராகுல் மற்றும் விஷால் ஆகிய இருவரும் நேற்றிரவு வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர்.
முகம் சிதைக்கப்பட்ட நிலையில் விஷாலும், தலையில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ராகுலும் பிணமாகக் கண் டெடுக்கப்பட்டனர். இவர்கள் கொலை முன்விரோதம் காரண மாக நடைபெற்றதா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோல், திருச்சி புறத்தாக் குடியில் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் கிறிஸ்டோபர் என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் பெரிய கட்டுப் பாளையம் பகுதியில் மது அருந்தும்போது நண்பர்களி டையே ஏற்பட்ட வாய்த் தகராறில் ரவுடி பிரிதிவிராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையை ரவுடி அருளரசு மற்றும் அவரது தம்பி அன் பரசன் இணைந்து செய்த நிலையில், பதுங்கி யிருந்த அருளரசை காவல்துறையினர் சுட்டுப் பிடித்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானா மதுரையில் கொலை வழக்கில் சிறையிலிருந்த ரவுடி விக்னேஷ், பிணையில் வெளிவந்த நிலையில், அடையாளம் தெரியாத நபர்கள் நேற்றிரவு (8.11.2026) வெட்டிப் படு கொலை செய்தனர்.
அவரது நண்பர் முனியாண்டி வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், கல்லல் அருகே ரவுடி நவீன் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலை யில், சிவகங்கை காவல் துறையினர் தீவிர விசா ரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
தேனி சமதர்மபுரம் அருகே காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் செந்தில்குமார், மது போதை கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சாலையை மறித்து, பட்டாசு வெடித்து ரீல்ஸ் எடுத்த வர்களை தட்டிக் கேட்ட செந்தில் குமாரை, மதுபோதையில் இருந்த இளைஞர்கள் அடித்துக் கொன் றுள்ளனர்.
இந்த வழக்கில் 3 பேரை கைது செய்துள்ள தேனி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட் டம் சென்றான்பாளையம் அருகே ஆந்திரத்தைச் சேர்ந்த மேகலா (வயது 24) என்ற இளம்பெண்ணை பிரசாத் என்பவர் குத்திக் கொலை செய்துள்ளார்.
பிரசாத்தைக் கைது செய்துள்ள பென்னலூர் பேட்டை காவல் துறை யினர் கைது செய்து விசா ரித்து வருகின்றனர்.
