நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பணமதிப்பு நீக்கம் பொருளாதாரத்தைச் சீரழித்தது; வாக்குரிமை நீக்கம் ஜனநாயகத்தை சிதைக்கிறது – காங்கிரஸ் விமர்சனம்! 2016இல் கொண்டுவரப்பட்ட பண மதிப்பு நீக்கம் பெரும் தோல்வி என்றும், தற்போது வாக்குரிமை தொடர்பான நடவடிக்கைகள் அரசியல் அமைப்பையே சீரழிப்பதாகவும், இவ்விரண்டுமே பிரதமர் நரேந்திர மோடியின் ஆட்சியின் பங்களிப்புகள் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
தி டெலிகிராப்:
* குஜராத் மத்தியப் பல்கலைக்கழகம், அய்அய்எம் பெங்களூரு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இடைக்காலத் தலைமையில் செயல்படுகின்றன; அய்தராபாத், வடகிழக்கு மலைப்பகுதி உள்ளிட்ட பல்கலைக்கழகங்களிலும் நிரந்தரத் துணைவேந்தர்கள் இல்லை. அய்தராபாத் மத்தியப் பல்கலைக்கழகம், வடகிழக்கு மலைப்பகுதி பல்கலைக்கழகம், இந்திரா காந்தி தேசிய பழங்குடியினர் பல்கலைக்கழகம் (அமர்கண்டக்), டாக்டர் ஹரிசிங் கவுர் பல்கலைக்கழகம் (சாகர்) உள்ளிட்டவற்றிலும் நிரந்தரத் துணைவேந்தர்கள் இல்லை. அய்அய்எம் ராய்ப்பூர், அய்அய்எம் திருச்சியிலும் நிரந்தர இயக்குநர்கள் இல்லை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “கோயில்களுக்கு மட்டும் ஏன் நிதி?” – மேற்கு வங்க அரசின் ரூ.1,000 கோடி திட்டத்தைக் கேள்விக்குள்ளாக்கிய காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி! “குருத்வாராக்கள், மசூதிகள் உள்ளிட்ட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் சமமான அணுகுமுறையுடன் நிதி ஒதுக்க வேண்டும்; இந்தியா ஒரு மதத்தினருக்கு மட்டுமே சொந்தமான நாடல்ல” என்று வலியுறுத்தினார்.
– குடந்தை கருணா
