கொல்கத்தா, நவ.9 பட்டாசுகளை வெடிப்பதால் நோய்கள் குணமாகும் என்று மேற்கு வங்க மாநிலம் டாலிப் கஞ்ச் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாபியா அதிகாரியின் கருத்து தற்போது பெரும் சர்ச் சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.
பாஜக சட்டமன்ற உறுப்பினர் பாபியா அதிகாரியின் இந்த அறிவியல் ஆதாரமற்ற கருத்து சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பலத்த கேலிக்கும் விமர்சனத்திற்கும் உள்ளாகியுள்ளது.
தீபாவளி மற்றும் மதப் பண்டிகைக் காலங்களில் காற்று மாசுபாடு மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டபோது, பட்டாசுகள் வெடிப்பது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பதில்லை என்றும், பட்டாசுகளால் சுற்றுப்புறச்சூழல் மாசாகிறது என்பது ஹிந்து விரோதிகளின் திட்டமிட்ட பரப்புரை –- உண்மையில் பட்டாசு வெடிப்பது பல்வேறு நோய்களைக் குணப்படுத்த உதவும் என்றும், காற்றில் கலக்கும் வேதிப்புகையால் பயிர்கள் செழித்து வளரும் என்றும் பாபியா அதிகாரி தெரிவித்தார். பட்டாசு வெடிக்கும்போது உருவாகும் ஒலியும் புகையும் வளிமண்டலத்தைச் சுத்திகரித்து நோய்களை விரட்டுவதாக அவர் வாதிட் டுள்ளார்.
அறிவியல் மற்றும் மருத் துவத் துறையினர் இத்தகைய கருத்துக்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பட்டாசு வெடிப்பதால் எழும் நச்சுப் புகையானது ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இதய நோயாளிகளுக்கு கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் இப்படிப் பேசுவது சகஜமானதே. தற்போதையை டில்லி முதலமைச்சர் 2022 ஆம் ஆண்டு டில்லி மாநகராட்சி மன்ற உறுப்பினராக இருந்த போது காற்று மாசால் பட்டாசுகளை வெடிப் பதைக் குறைக்கவேண்டும் என்று அப்போதையை ஆம் ஆத்மி கட்சி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்தார்.
‘‘பட்டாசு வெடிப்பதால் காற்றுமாசு ஏற்படாது மாறாக விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது’’ என்று கூறினார். மேலும் சமூக வலைதளத்தில் பட்டாசு வெடிப்பதை ஊக்குவிக்கும் விதமாக அவரே விதவிதமான பட்டாசுகளை வெடித்து காணொலி வெளியிட்டார்.
