பி.ஜே.பி.யின் 12 ஆண்டு கால ஆட்சியில் ஜனநாயகம், அரசியல் அமைப்புகளுக்குப் பெரும் இடர்ப்பாடு சோனியா காந்தி குற்றச்சாட்டு!

- Advertisement -

புதுடில்லி, நவ.9 பாஜகவின் 12 ஆண்டுகால ஆட்சியில் இந்தியாவின் ஜனநாயகம் மற்றும் அரசியல் அமைப்பு களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலான ‘Belonging: A Journey of Love’ வரும் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது. இந்நிலையில், சோனியா காந்தி ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கடந்த 12 ஆண்டுகால பாஜக ஆட்சியில் நமது நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புக்கும், ஜனநாயகத்துக்கும், அரசியல் அமைப்புகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மக்கள் தற்போது ஒன்றிய பாஜக அரசு மீது அதிருப்தி அடையத் தொடங்கியுள்ளனர். பாஜக அரசால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும் அவர்கள் உணர்ந்து வருகின்றனர். நல்ல நிர்வாகம் மீண்டும் திரும்புவதை இந்திய மக்கள் வரவேற்பார்கள். நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட அந்தக் காலகட்டத்தை, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பார்வையில் இருந்து பார்க்கும்போது, வேகமாக மோசமடைந்து வந்த சூழ்நிலைகளைக் கையாள அவர் போராடியதை உணர முடிகிறது. அவசரநிலையின் போது நடைபெற்ற அத்துமீறல்களுக்காக அவர் பின்னர் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்ததுடன், மன்னிப்பும் கேட்டார். காங்கிரஸ் கட்சி ஒத்த கருத்துடைய பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எங்கள் கட்சியின் வெற்றி வாய்ப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *