கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 8.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* பெட்ரோலில் ’எத்தனால்’ கலப்பு அளவில் மோடி அரசு மக்களை ஏமாற்றுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு! கருநாடகாவில் ஆய்வு செய்யப்பட்ட 14 பெட்ரோல் மாதிரிகளில் 11 மாதிரிகளில் நிர்ணயிக்கப்பட்ட 20% அளவைவிட அதிகமாக ’எத்தனால்’ கலக்கப்பட்டு உள்ளதாகவும், இது பொதுமக்களை ஏமாற்றும் செயல் என்றும் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தலைமைத் தேர்தல் ஆணையர் ஜனநாயகத்தைச் சிதைக்கிறார்; பிரதமர் மோடி அவமானத்துடன் பதவி விலகுவார் – காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் குற்றச்சாட்டு! தலைமைத் தேர்தல் ஆணையரின் ஆதரவுடன் எஸ்.அய்.ஆர். நடவடிக்கையை எளிதாகச் செயல்படுத்தலாம் என மோடி அரசு கருதியதாகவும், டெல்லிப் போராட்டங்கள் அந்தத் திட்டத்திற்கு சவாலாக அமைந்ததாகவும் வேணுகோபால் தெரிவித்தார்.

தி இந்து:

* உரிமைகளுக்காகப் போராடும் மாணவர்கள் சாவர்க்கர்கள் அல்ல, மன்னிப்பு கேட்பதற்கு! பிரகாஷ்ராஜ் காட்டம். கேள்வி கேட்பதற்கும் உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் மன்னிப்புக் கடிதம் எழுதும் சாவர்க்கர்கள் இந்திய இளைஞர்கள் அல்ல என்று நடிகரும் சமூகச் செயற்பாட்டாளருமான பிரகாஷ் ராஜ் தெரிவித்தார்.

* பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின் 10 ஆண்டுகளில் பணப்புழக்கம் குறையவில்லை; கள்ள நோட்டுகள் அதிகரிப்பு! நாட்டின் 86% பணத்தை ஒரே இரவில் செல்லாததாக்கிய பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பணப்புழக்கம் குறையவில்லை என்றும், குறிப்பாக 500 ரூபாய் கள்ள நோட்டுகள் அதிகரித்துள்ளதாகவும் ரிசர்வ் வங்கித் தரவுகள் தெரிவிக்கின்றன.

தி டெலிகிராப்:

* பத்து ஆண்டுகளாக பணிப் நியமனம் மறுக்கப்பட்ட ஓபிசி தேர்வர்களுக்கு ‘கிரீமிலேயர்’ விவகாரத்தில் உச்சநீதிமன்றம் நிவாரணம்! பெற்றோரின் சம்பளத்தைத் தவறாகக் கணக்கிட்டு இடஒதுக்கீடு தகுதியை மறுத்த 106 ஓபிசி தேர்வர்களுக்கு பயனளிக்கும் வகையில், உச்சநீதிமன்றம் தனது உத்தரவைச் செயல்படுத்த ஒன்றிய அரசுக்கு இரண்டு மாதங்கள் அவகாசம் வழங்கியுள்ளது.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முன்னணி மருத்துவக் கல்லூரிகளில் இருந்து முதுநிலை மருத்துவர்கள் விலகல்! எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட முன்னணி மருத்துவ நிறுவனங்களில் முதுநிலை மருத்துவர்கள் பயிற்சிப் படிப்பில் இருந்து விலகி வருகின்றனர். 36 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டிய கட்டாயம், பணியிடத் துன்புறுத்தல், நச்சுத்தன்மை நிறைந்த பணிச்சூழல் மற்றும் போதிய ஆதரவு இல்லாமை ஆகியவை  புகார்களாக தரப்பட்டுள்ளன. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பதிலின்படி, 2025இல் டெல்லி எய்ம்ஸ்-இல் மட்டும் 34 இளநிலை மருத்துவர்கள் விலகியுள்ளனர்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *