கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.11.2026

- Advertisement -

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இந்தியா–அமெரிக்கா உறவு: 8 தொலைபேசி உரையாடல்கள் ஏற்பாடு – அமெரிக்க நிறுவனம் தகவல்: டிரம்பின் உதவியாளர் ஜேசன் மில்லரின் பரப்புரை நிறுவனம், மே–ஜூன் மாதங்களில் இரு நாட்டு உயரதிகாரிகளிடையே 8 தொலைபேசி உரையாடல்களை ஏற்பாடு செய்துள்ளது. இதற்காக இந்தியத் தூதரகம் அந்நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தப்படி மாதம் 1.5 லட்சம் அமெரிக்க டாலர் வழங்கியுள்ளது. அமெரிக்க அரசின் கொள்கை விவகாரங்களில் இந்தியாவுக்கு ஆலோசனை வழங்குவதே ஒப்பந்தத்தின் நோக்கமாகும்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமர் மோடியைக் குழப்ப வேண்டாம்; எஸ்.அய்.ஆர். குறித்து வெளிப்படையான விவாதத்திற்கு அவரைச் சம்மதிக்க வையுங்கள் – அமித் ஷாவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தல். எஸ்.அய்.ஆர். தொடர்பாக பிரதமர் மோடியுடன் வெளிப்படையான விவாதம் நடத்த தயார் என ராகுல் காந்தி தொடர்ந்து சவால் விடுத்து வருகிறார். அய்ந்து நிமிட விவாதத்திலேயே பிரதமர் துரோகி என்பது நிரூபணமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தி இந்து:

* ஓபிசி கிரீமிலேயர் தீர்ப்பு: ஏற்கெனவே வழங்கப்பட்ட இட ஒதுக்கீடுகள் பாதிக்கப்படாது – உச்சநீதிமன்றம்: பெற்றோரின் சம்பளம் மற்றும் விவசாய வருமானத்தை கிரீமிலேயர் கணக்கில் சேர்க்கக் கூடாது என்ற 1993 அரசாணையை உறுதிப்படுத்திய மார்ச் 11, 2026 தீர்ப்பு, ஏற்கெனவே வழங்கப்பட்ட பணி நியமனங்கள் மற்றும் பதவி மூப்பில் மாற்றம் செய்யாது என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

தி டெலிகிராப்:

* “ஹிந்து தேசியவாதத்தை திட்டவட்டமாகக் கண்டித்துள்ளேன்; மாணவர் போராட்டங்களை ஆதரித்துள்ளேன்” – அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா: இந்தியாவில் ஊழலுக்கு எதிராகவும், அனைவரையும் உள்ளடக்கிய சமூகத்திற் காகவும் போராடும் மாணவர்களின் போராட்டத்தை ஆதரிப்பதாகவும், ஹிந்துத்துவா தேசியவாதத்தை திட்டவட்டமாகக் கண்டிப்பதாகவும் அமெரிக்க ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா தெரிவித்துள்ளார். நேருவின் மதச்சார்பற்ற பன்முகத்தன்மைக் கொள்கையில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *