அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகாத அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்

- Advertisement -

சென்னை, நவ. 7- அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு மீறி ரூ.35.79 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த வழக்கு விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் நேற்று (6.11.2026) சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகாதால், கைது செய்வது குறித்து அதிகாரிகள் சட்ட வல்லுநர்களிடம் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்துகள் சேர்த்ததாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது கடந்த 2021ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து, 40க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தியது.

இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவிக்கு அமலாக்கத் துறை கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பியது. அந்த அழைப்பாணையைத் தொடர்ந்து நேற்று அமலாக்கத்துறையின் சென்னை மண்டல அலுவலகத்தில் விசாரணை அதிகாரிகள் முன் இருவரும் ஆஜராக வேண்டும். ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் நேற்று ஆஜராகவில்லை.

இருந்தாலும் அவர்களில் ஒருவர் நேரில் ஆஜராவார்கள் என்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அதிகாரிகள் காத்திருந்தனர். ஆனால் அவர்கள் வரவில்லை.

இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக ரூ.35.79 கோடி மோசடி தொடர்பாக அடுத்தக்கட்டமாக அவர்கள் மீது மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கை குறித்து அழைப்பாணை அனுப்புவதா அல்லது கைது செய்வதா என்பது குறித்து சட்ட வல்லுநர்களுடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *