பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் சொந்தமாக எழுத்தர் அழைத்து வர அனுமதி இல்லை! டி.என்.பி.எஸ்.சி. மனு

- Advertisement -

மதுரை, நவ. 7- மதுரையைச் சேர்ந்த வேல்முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் உதவ தகுதியான, விருப்பமான உதவியாளர்களை தேர்வு செய்ய அனுமதிக்க வேண்டும். பிரெய்லி கைக்கடிகாரம், கணித பலகை, எழுத்துக்களின் உருவத்தை பெரிதாக்கி பார்க்க லென்ஸ் ஆகியவற்றை பார்வைத்திறன் குறைபாடுள்ள தேர்வர்கள் தேர்வு மய்யத்துக்கு கொண்டு செல்ல அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வேல்முருகன், ராமகிருஷ்ணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் கு.சாமிதுரை வாதிட்டார். டிஎன்பிஎஸ்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், மாற்றுத் திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி மாற்றுத் திறனாளிகளுக்கு வரையறுக்கப்பட்டுள்ள குறைபாடுகள் உள்ளவர்கள் தேர்வு எழுத உதவுவதற்கு எழுத்தாளர் ஒதுக்கப்படுகிறார். தேர்வு எழுதுவோர் சொந்தமாக எழுத்தாளரை அழைத்து வர அனுமதிப்பது சாத்தியமில்லை. தங்களுக்கு விருப்பமான எழுத்தாளர்களைத் அழைத்து வர அனுமதிப்பது, விண்ணப்பதாரர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதிகள் இது தொடர்பாக அரசின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *