கோவை கு. இராமகிருஷ்ணன் சில நாள்களுக்கு முன்பு எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலமடைந்து வருகிறார். அவரது இல்லத்திற்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். உடன்: மருத்துவர் இரா.கவுதமன், கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், கோவை மாவட்டத் தலைவர் ம.சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், மாநில தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளர் வி.சி. வில்வம், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி மற்றும் தோழர்கள் உள்ளனர். (5.11.2026)

4.11.2026 அன்று கேரள மாநிலம் கண்ணணூரில் நடைபெற்ற தென் இந்திய அளவிலான பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற அமுதினி யை (கோவை கு. இராமகிருஷ்ணன் மகள்) பாராட்டி கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பதக்கத்தை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். (கோவை, 5.11.2026)
