சென்னை, நவ. 6- இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நேற்று (நவ. 5) தெரிவித்துள்ளார்.
இது குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
”ஒரு தலைமுறைக்கான மிகச் சிறந்த பரிசு, – சிந்திக்கும் சுதந்திரமும் கற்கும் வாய்ப்பும்!
அதனால்தான், திமுக ஆட்சியில், தலை நகரில் அண்ணா நூற்றாண்டு நூலகம்!
தூங்காநகரில் கலைஞர் நூற்றாண்டு நூலகம்!
தொழில்நகரில் பெரியார் அறிவுலகம்!
திருச்சி, நெல்லை, கடலூர், சேலம் ஆகிய நகரங்களில் நாம் தொடங்கிய நூலகப் பணிகளும் விரைவில் நிறைவ டைந்து, மக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும்!
“பூங்கொத்துகள், பொன்னாடைகள் வேண்டாம்; புத்தகங்கள் தாருங்கள்!” என்ற எனது வேண்டுகோளை ஏற்று நீங்கள் அன்பளிப்பாக வழங்கிய நூல்களில், இதுவரை 7 லட்சத்து 10 ஆயிரம் நூல்களை நூலகங்களுக்கும் படிப்பகங்களுக்கும் வழங்கியுள்ளோம்.
அதன் தொடர்ச்சியாக தற்போது, பாளையங்கோட்டை தூய சவேரியார் (தன்னாட்சி) கல்லூரி நூலகத்திற்கு 5,000 நூல்கள், வாசுதேவநல்லூர் ரஹ்மானியா கல்விக்கூடம் வாட்பயிற்சி மய்யத்திற்கு 3,000 நூல்கள், செங்கம் வட்ட அரசு கலைக் கல் லூரி நூலகத்திற்கு 2,000 நூல்கள் என மொத்தம் 10,000 நூல்களை வழங்கியதில் மகிழ்ச்சி!
நூல்கள் தேவைப்படும் கல்வி நிறுவனங்களும் நூலகங்களும் அண்ணா அறிவாலயத் திற்குக் கடிதம் எழுதலாம். இருப்புக்கேற்ப வழங்குவோம்!
புத்தகங்கள் கைமாறட்டும்! தலை முறைகள் தாண்டி அறிவு பரவட்டும்!” என்று மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
