விவசாய நிலத்தைப் பிற நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான விதி திருத்தம்

- Advertisement -

சென்னை, நவ. 6– விவசாய நிலத்தை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக பயன்படுத்த நிலப் பயன்பாடு மாற்ற விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத நோக்கங்களுக்காக மேம்படுத்தும் நேர்வில், விண்ணப்பதாரர் இணையவழி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது, ‘‘விற்பனைப் பத்திரம் அல்லது குத்தகைப் பத்திரம் அல்லது பொது அதிகாரப் பத்திரத்தின் சுய சான்றொப்பமிட்ட நகல்; பட்டாவின் சுய சான்றொப்பமிட்ட நகல்; மனையின் வடிகால் அமைப்பு வரைபடம்; பொருத்தமான அளவீட்டில் வரையப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்குச் சொந்தமில்லாத வேறு எந்தப் புறம்போக்கு நிலமோ, அரசு நிலமோ அல்லது பிற நிலங்களோ சேர்க்கப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் இணையவழி உறுதிமொழிப் பத்திரம்; நன்செய் நிலத்திற்கான சிட்டாவின் சுய சான்றொப்பமிட்ட நகல்; மற்றும் நடப்பு ஆண்டு உள்பட கடந்த மூன்று ஆண்டுகளுக்கான அடங்கலின் சுய சான்றொப்பமிட்ட நகல்’’ ஆகிய ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *