‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஜனநாயக ஆயுதத்தைப் பலவீனப்படுத்தும் காங்கிரஸ் சாடல்

- Advertisement -

புதுடில்லி, நவ. 6- அமெரிக்க தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி காங். கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் அவரது ‘எக்ஸ்’ பக்க பதிவில், ‘’இடைத் தேர்தல்கள் ஆளும்கட்சி மீதான மக்களின் பொறுப்புக்கூறலை நிலைநிறுத்த எவ்வளவு சக்திவாய்ந்தவை என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் மோடி அரசு கொண்டுவரத் துடிக்கும் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ முறை அமல்படுத்தப்பட்டால், அது ஆளும்கட்சியை மக்கள் கேள்வி கேட்கும் அதிகாரத்தையும், இடைக்காலத்தில் பொறுப்புக்கூற வைக்கும் இந்த ஜனநாயக ஆயுதத்தையும் முற்றிலுமாக முடக்கிவிடும் என்று சாடியுள்ளார்.

அமெரிக்க மக்கள் அந்நாட்டின் அரசியல் சாசன ஜனநாயகத்தின் முக்கிய அங்கமான ஜனநாயகச் சமநிலையை மீண்டும் மீட்டெடுத்துள்ளனர். ஆனால், இந்தியாவில் மோடி பிரதமராக பதவியேற்ற 2014ஆம் ஆண்டு முதல் ஜனநாயகச் சமநிலை ஆபத்தான முறையில் சீர்குலைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். காங். கட்சியின் மற்றொரு மூத்த தலைவரான கே.சி. வேணுகோபால், ‘’ மக்களின் ஒருங்கிணைந்த சக்தியால் சர்வாதிகாரப் போக்கை வீழ்த்த முடியும் என்பதை அமெரிக்க தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளது. விலைவாசி உயர்வு, வேலையின்மை, மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் ஆகியவற்றில் கவனமாக இருக்கவும், அரசாங்கங்களின் அதிகாரத் திமிரைக் கட்டுப்படுத்தவும் இதுபோன்ற இடைக்காலத் தேர்தல்கள் உதவுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கைது செய்யப்பட்டவரை
24 மணி நேரத்துக்குள் ஆஜர்படுத்த வேண்டும்!

 உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, நவ. 6- ஒருவரை கைது செய்யப் பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர், தான் செப். 29, 2025 அன்று காவல்துறையால் காவலில் வைக்கப்பட்டதாகவும், ஆனால், செப். 30 தான் முறையாக கைது செய்யப் பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்ட வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் உஜ்ஜல் புயான் மற்றும் அதுல் எஸ் சந்துர்கர் அடங்கிய அமர்வு, ஒருவர் கைது செய்யப்பட்டதிலிருந்து 24 மணி நேரத்துக்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட வேண்டும் அல்லது விடுவிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.

மேலும், ”கைதுக்கும் தடுப்புக் காவலுக்கும் இடையில் ஒரு செயற்கையான வேறுபாட்டை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட அடிப்படைப் பாதுகாப்பை நீர்த்துப்போகச் செய்யும் செயல்.

ஒருவர் செய்ததாகச் சந்தேகப்பட்டு, கைது செய்யும் அதிகாரியால் அவர் தடுத்து வைக்கப்படும் நொடியிலிருந்து 24 மணிநேரக் காலக்கெடு தொடங்குகிறது. அந்த நொடியே அவரது சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அதன்படி, சட்டப்பிரிவு 22-இன் உட்பிரிவு (2)-இல் குறிப்பிடப்பட்டுள்ள ‘கைது மற்றும் தடுப்புக் காவல்’ ஆகிய சொற்கள் ஒத்த பொருளுடையவை” என்று நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *