நீதிபதிகளும் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரும் இணைந்து கூட்டுச் சதி? முன்னாள் நீதிபதி சந்துரு பேட்டியில் கடும் விமர்சனம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ.6 தேர்தல் நடைமுறைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பாக முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கே. சந்துரு தெரிவித்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளன.

தனியார் செய்தி ஊடகத் திற்கு அளித்த பேட்டியில் அவர் தெரிவித்ததாவது, தேர்தல் நடைமுறைகளில் நிலவும் குளறுபடிகள், அரசியலமைப்புச் சட்ட நெறிமுறைகள் மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசிய  அவர் மக்கள் உரிமைகள் மற்றும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்பான விவகாரங்களை பொதுவெளியில் விவாதிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய அரசியல் சூழலில் மக்களின் உரிமைகள் பாதிக்கப்படுவதாகவும், ஜனநாயக அமைப்புகள் மீதான தாக்குதல்கள் தொடர்வதாகவும் கே. சந்துரு தெரிவித்தார்.. உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காகப் போராடும் மக்கள், இளைஞர்களின் குரல்கள் ஒடுக்கப்படக் கூடாது எனக் குறிப்பிட்ட அவர், ஜனநாயக விழிப்புணர்வை மக்களிடையே பரப்ப வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். ஒவ்வொரு தெருமுனையிலும் மக்களின் உரிமைகள், சமூக நீதி மற்றும் ஜனநாயகக் கோட்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

காவிரியில் தண்ணீர் திறக்காததால்
4 லட்சம் ஹெக்டேர் விவசாயம் பாதிப்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு முறையீடு!

புதுடில்லி, நவ. 6- காவிரி ஆற்றில் கருநாடக அரசு இந்த ஆண்டு உரிய தண்ணீரைத் திறந்துவிடாததால் தமிழ்நாட்டில் சுமார் 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காவிரியில் கர்நாடகம் உரிய நீரை திறக்கவும், தமிழ்நாட்டிற்கான பற்றாக்குறை நீரை பெற்றுத் தர காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட கோரியும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டபடி வினாடிக்கு 3,000 கன அடி தண்ணீரை கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி முதல் கருநாடக அரசு திறந்துவிடவில்லை என்று தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்குரைஞர் பி.கருணாகரன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பு முறையிட்டார்.

மேலும், கருநாடக அரசு தண்ணீர் திறக்காததால் தமிழ்நாட்டில் விவசாயப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 4 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இவ்வாறு தொடர்ந்து தண்ணீர் கிடைக்காத நிலையில் தமிழ்நாடு விவசாயிகள் என்னதான் செய்ய முடியும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியதோடு, காவிரி நீர் திறப்பது தொடர்பான ஆணையத்தின் உத்தரவுகளை கருநாடக அரசு முறையாகச் செயல்படுத்தாததால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

எனவே, காவிரி நீர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்துள்ள வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி சூர்யகாந்த் அமர்வு, காவிரி நீர் தொடர்பான வழக்கை விரைந்து விசாரிப்பது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்தது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *