ஜெயங்கொண்டம், நவ. 6- அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் காவல் நிலையம் சார்பில் போதைப்பொருள் மற்றும் மதுப் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி சிறப்பாக நடைபெற்றது.
இப்போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு சிறப்பான வெற்றிகளைப் பெற்றனர். இதில் துளசிமணி மூன்றாம் இடத்தையும், பிரதீப்குமார் நான்காம் இடத்தையும் பிடித்தனர். மேலும், முதல் பத்து இடங்களுக்குள் கிருபாகரன், சசிகரன், மணிசெல்வன், கவின், ராஜரூபன் ஆகிய மாணவர்களும் இடம்பிடித்து பள்ளிக்குப் பெருமை சேர்த்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு துணைக் காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோர் கோப்பைகள் மற்றும் பதக்கங்களை அணிவித்து பாராட்டி கவுரவித்தனர்.
மாணவர்களின் வெற்றிக்காக சிறப்பான பயிற்சி அளித்து வழிநடத்திய உடற்கல்வி ஆசிரியரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது.வெற்றி பெற்ற மாணவர்களையும், உடற்கல்வி ஆசிரியரையும் பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் மனமாரப் பாராட்டி வாழ்த்தினர்.போதைப்பொருள் இல்லா சமுதாயம்! ஆரோக்கியமான இளைய தலைமுறை!
முதலமைச்சர் கோப்பை:
பெரியார் கல்வி நிறுவன மாணவர் சாதனை
ஜெயங்கொண்டம், நவ. 6- சென்னை பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான மட்டைப்பந்து போட்டியில், அரியலூர் மாவட்ட அணியின் சார்பில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் முகமது ஆஷிக் பங்கேற்று விளையாடினார்.
மாநில அளவிலான போட்டியில் அரியலூர் மாவட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடிய மாணவரின் சாதனை பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளது. மாணவரை முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர். மாவட்டத்தின் பெருமையை மாநில அளவில் நிலைநாட்டிய மாணவர் முகமது ஆஷிக்கிற்கு வாழ்த்துகள்!
