திருச்சி, அக். 4- திருச்சி பெரியார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப் பழக்கம், காசநோய் இல்லாத இளைஞர்களை உருவாக்குதல் குறித்த நாட்டு நலப்பணித்திட்ட 7 நாள் சிறப்பு முகாம் 26.09.2026 அன்று பள்ளியின் தலைமையாசிரியைசு.பாக்கியலெட்சுமி தலைமையில் தொடங்கப்பட்டது.
இம்முகாமில் மாணவிகளுக்கு சமூக சேவை, தூய்மை. சுகா தாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூகப் பொறுப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
முகாமின் ஒரு பகுதியாக பள்ளியின் உயிரியல் முதுகலை ஆசிரியை ஜெ.எஸ்குலின் நான்சி காசநோய் விழிப்புணர்வு பற்றி மாணவிகளிடையே உரையாற்றினார். சுற்றுப்புறப் பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. என்.எஸ்.எஸ். மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
27.09.26 அன்று கண்டோன் மெண்ட மகளிர் காவல்நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர்மு.லதா பங்கேற்று பெண்கள் பாதுகாப்பு மற்றும் இணையதளத்தைப் பாதுகாப்பாகப் பயன்படுத்துதல் குறித்து மாணவிகளிடையே உரையாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
28.09.26 அன்று நாட்டு நலப்பணித்திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் ரா.இராஜேந்திரன் முகா மைப் பார்வையிட்டு போதைப் பழக்கம் இல்லாத இளைஞர்களை உருவாக்குவது குறித்து மாணவிகளிடையே உரையாற்றினார்.
