சென்னை பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மய்யத்தில் யூரி காகரின் சிலை திறந்து வைத்து இஸ்ரோ தலைவர் மாணவர்களுக்கு யோசனை

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 6- பள்ளி அறிவியல் பாடத்தில் விண்வெளி தொடர்பான பாடமும் இடம்பெற வேண்டும் என்று இஸ்ரோ தலைவர் வி.நாராயணன் யோசனை தெரிவித்தார்.

விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர் ரஷ்யாவை சேர்ந்த யூரி காகரின் ஆவார். ரஷ்ய நாட்டின் நிதியுதவியுடன் சென்னை கோட்டூர் புரத்தில் உள்ள பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மய்ய வளாகத் தில் யூரி காகரின் மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

அம்மய்யத்தின் செயல் இயக்குநர் கே.சண்முக சுந்தரம் தலைமையில் நேற்று (5.11.2026) நடைபெற்ற விழாவில், இஸ்ரோ தலைவர் நாராயணன், சென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதர் வலேரி கோட்சேவ் ஆகியோர் இணைந்து யூரி காகரினின் சிலையைத் திறந்து வைத்தனர்.

இதைத் தொடர்ந்து பள்ளி மாணவ-மாணவிகளுடன் நாராய ணன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவின் விண்வெளிச் பயணத்தில் சோவியத் யூனியன் முக்கியப் பங்காற்றி உள்ளது.

இந்திய விண்வெளி வளர்ச்சிக்கு ரஷ்யா அளித்த உதவியை இந்த நேரத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். ஒரு காலத்தில் விண்வெளித் தொழில் நுட்பத்துக்காகப் பிற நாடுகளைச் சார்ந்திருந்த இந்தியா, தற்போது மற்ற நாடுகளின் விண்வெளித் துறை வளர்ச்சிக்கும் உதவி செய்யும் அளவுக்கு முன்னேறியுள்ளது என்று அவர் கூறினார்.

முன்னதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தற்போது அதிகளவில் நடைபெற்று வருகிறது. 1969ஆம் ஆண்டு நிலவில் மனிதன் காலடி எடுத்து வைத்தான். அடுத்து விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப உள்ளனர்.

ஆனாலும் முதன்முதலில் விண்வெளிக்குச் சென்று வந்தவர் யூரி காகரின். இந்தியாவிலும் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

பள்ளிகளில் அறிவியல் பாடங் களுடன் விண்வெளி தொடர்பான பாடங்கள் இடம்பெற வேண்டும். அவற்றைக் கொண்டு வந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.

மழை தொடர்பான விவரங் களைக் கணிக்க வேண்டும் என்றால் நிறைய தரவுகள் தேவைப்படும். அது அந்த துறையில் பணியாற்று பவர்களால் மட்டுமே முடியும்.

மழை பெய்வதை முன்கூட்டியே கணிப்பது, தட்பவெப்ப நிலையைச் சரியாக கணிப்பது போன்ற பணிகள் வானிலை துறைக்குரியவை. அவர் களுக்கு தேவையான தரவுகளை செயற்கைக்கோள் மூலம் இஸ்ரோ வழங்குகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *