புதுடில்லி, நவ.6 வங்கி மற்றும் நிதி நிறுவனங்களை குறிவைத்து, செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி, சைபர் கொள்ளையர்கள் கைவரிசை காட்டத் தொடங்கி யுள்ளதாக, மத்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாட்டில் உள்ள வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் பின்டெக் நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனை கட்ட மைப்பில் உள்ள ஓட்டை களைப் பயன்படுத்தி, மோசடி கும்பல் ஊடுருவுகிறது. மனிதர்களால் கண்காணிக்க முடியாத அதிவேகத்தில் ‘ஏஅய் ஏஜென்ட்கள்’ மூலம், ஒரே நேரத்தில் பல போலி வங்கிக் கணக்குகளுக்கு கோடிக் கணக்கான ரூபாயை மாற்றிவிட்டு, சுவடு தெரியாமல் ஆதாரங்களை அழித்து விடுகின்றனர்.
ஒன்றிய அரசின் ‘செர்ட்-இன்’ அமைப் புடன் இணைந்து சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மய்யம், நிதி நிறுவனங்களுக்கு வெளியிட் டுள்ள முக்கிய அறிவுறுத்தல்கள்:
l வங்கிகள், நிதி நிறுவன அமைப்புகளில் சைபர் தாக்குதல் நடந்திருப்பது தெரிந்தால், தாமதிக்காமல் அடுத்த 6 மணி நேரத்திற்குள் ‘செர்ட்-இன்’ அமைப்புக்கும், ரிசர்வ் வங்கியின் ‘தக்ஸ்’ (DAKSH) போர்ட்டலிலும் தகவல் தெரிவிக்க வேண்டும்.
l நிதி பரிவர்த்தனை நடை பெறும் தானியங்கி அமைப்புகள், பணப் பட்டுவாடா நெறிமுறை களை பலப்படுத்த வேண்டும்.
l தகவல் தொழில்நுட்பப் பிரிவு, முதன்மை தகவல் பாது காப்பு அதிகாரிகள் மற்றும் பணப் பரிவர்த்தனை கண்காணிப்புக் குழுக்கள் இணைந்து உடனடியாக சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளைக் கண்டறிந்து முடக்க வேண்டும்.
l வாடிக்கையாளர்களின் பணம் மற்றும் வங்கி அமைப்பு களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடியாக உச்சகட்ட எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். இவ்வாறு நிதி நிறுவ னங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
