கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 6.11.2026

- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* டிரம்புக்கு நெருக்கடி – ஜனநாயகக் கட்சியினர் விசாரணைக்கு உறுதி; 2028 அதிபர் தேர்தலுக்கும் தயாராகின்றனர்! இடைத்தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் வெற்றி பெற்று பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியுள்ள நிலையில், டிரம்ப் நிர்வாகத்தின் ஊழல் மற்றும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உறுதியளித்துள்ளனர். இதற்கிடையில், 2028 அதிபர் தேர்தலுக்கான போட்டியும் ஜனநாயகக் கட்சிக்குள் தீவிரமடைந்துள்ளது; மிச்சிகனில் அப்துல் எல்-சயீத் வெற்றியும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

* நெதன்யாகுவை ஆட்சியிலிருந்து அகற்ற அரபுக் கட்சிகள் கூட்டணி முயற்சி! இஸ்ரேலில் நெதன்யாகுவின் நீண்ட கால ஆட்சிக்கு முடிவு கட்ட, அரபுக் கட்சிகள் யூதக் கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அமைக்க முன்வந்துள்ளன. பாலஸ்தீனப் பிரச்சனை, காஸா போர் மற்றும் மேற்குக் கரை ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் நெதன்யாகு அரசின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து உள்ள நிலையில், புதிய அரசியல் மாற்றத்திற்கான முயற்சி தீவிரமடைந்துள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீதான லஞ்சப் புகார்: கேரளாவில் புதிய விசாரணை. 2006ஆம் ஆண்டு சாலைத் திட்டத்தில் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார் தொடர்பாக கேரள அரசு மீண்டும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தப் புகாரைத் தொடர்ந்து அப்போதைய பொதுப்பணித்துறை செயலர் பதவியிலிருந்து ஞானேஷ்குமார் விலகிய பின்னணி மற்றும் மலேசியப் பொறியாளர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வாரணாசியில் இருந்து புறப்படும் ரயில்களில் புலால் உணவுக்கு தடை விதிக்க காசி நகரத் துறவிகள் கோரிக்கை: ஆன்மிக நகரமான காசியிலிருந்து இயக்கப்படும் ரயில்களில் புலால் உணவு வழங்குவதை தடை செய்ய வேண்டும் என காசி நகரத் துறவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அயோத்தி, வைஷ்ணவ தேவி வழித்தட வந்தே பாரத் ரயில்களில் புலால் உணவு வழங்கப்படாத போது, காசியிலிருந்து புறப்படும் ரயிலிலும் அதே நடைமுறையை பின்பற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தி இந்து:

* வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை (SIR) ரத்து செய்ய இந்தியா கூட்டணி வலியுறுத்தல்! பெங்களூருவில் நடைபெற்ற ‘வாக்கைக் காப்போம், நாட்டை காப்போம்’ போராட்டத்தில், எஸ்.அய்.ஆர். நடவடிக்கையை ரத்து செய்யவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகவும் இந்தியா கூட்டணி வலியுறுத்தியது. கருநாடக உள்ளாட்சித் தேர்தல்களில் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை பயன்படுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அய்ந்து அம்சத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* எஸ்.அய்.ஆர். மூலம் வாக்குரிமை மட்டுமின்றி மக்களின் நலத்திட்ட உரிமைகளும் பறிபோகும் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (SIR), மக்களை நலத்திட்டப் பலன்களிலிருந்து விலக்கி விடும் அபாயம் உள்ளதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. “வாக்குத் திருட்டு என்பது வெறும் முன்னோட்டம்தான்; மக்களின் உரிமைகளைப் பறிப்பதே முழுமையான திட்டம்” என ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்.

தி டெலிகிராப்:

* எஸ்.அய்.ஆர்.-க்கு எதிராக நவம்பர் 7 அன்று கொச்சியில் மாபெரும் போராட்டம்! வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, நவம்பர் 7 மாலை 4 மணிக்கு கொச்சி ராஜேந்திர மைதானத்தில் ‘ஜந்தர் மந்தர் @ கொச்சி’ போராட்டம் நடைபெறுகிறது. ஜனநாயகத்தையும் வாக்குரிமையையும் பாதுகாக்க நடைபெறும் இப்போராட்டத்தில் சி.ஜே.பி. தலைவர்கள் அபிஜீத் திப்கே, ஆஃப்ரீன் நவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* யு.ஜி.சி. சமத்துவ விதிகளை திரும்ப பெறாமல் மறு பரிசீலனை என்ற பெயரில் காலம் கடத்தும் ஒன்றிய அரசு! யு.ஜி.சி. சமத்துவ விதிகளை மறுபரிசீலனை செய்ய புதிய குழு அமைப்பது குறித்து ஆலோசிப்பதாக உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உயர்சாதியினரின் எதிர்ப்பை சமாளிக்க அரசு காலம் கடத்துவதாக கருதப்படுகிறது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *