குழந்தை தொழிலாளர் தடுப்புச் சட்டத்தை செயல்படுத்த சிறப்புப் பிரிவு அமைக்க ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

1 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 6- 2016 குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு முறை) திருத்தச் சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டின் அசல்  குழந்தைத் தொழி லாளர் சட்டத்தை திருத்தி, குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு முறை) திருத்தச் சட்டம் 2016 அமலுக்கு வந்தது.

இது 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை அனைத்து வகையான வேலைவாய்ப்புகளிலும் செயல்முறைகளிலும் பணியமர்த்துவதை முற்றிலுமாகத் தடை செய்கிறது.

மேலும் இதன் விதிகள் அபாயகரமான தொழில்களில் குழந்தைத் தொழிலாளர்களை பணியமர்த்துவதையும் தடைசெய்கிறது.

‘ஹெல்த் ஃபார் மில்லியன்ஸ்’ என்ற தன்னார்வ அமைப்பு தாக்கல் செய்த மனுவை நேற்று (5.11.2026) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வி.என்.பாட்டி மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகி யோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

ஹெல்த் ஃபார் மில்லி யன்ஸ் அமைப்பு 2009ஆம் ஆண்டு இந்த மனுவை தாக்கல் செய்திருந்தது. அதில், 1986 சட்டத்தில் குடும்பத் தொழில்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் குழந்தைகள் வேலை செய்ய வழங்கப்பட்டிருந்த சில விதிவிலக்குகளில் அரசியலமைப்பு சட்டச் செல்லுபடித்தன்மையை கேள்விக்கு உட்படுத்தி யிருந்தன.

குழந்தைத் தொழிலா ளர் முறைக்கு எதிரான சட்டத்தில் இருந்த விதிவிலக்குகளை நீக்கக் கோரியும், உழைக்கும் குழந்  தைகளுக்கு கல்வி மற்றும் மதிய உணவு வசதிகளை வழங்கக் கோரியும் வலியுறுத்தியிருந்தது.

ஏற்கனவே 2016 கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தில் இந்த பிரச்சினைகள் நிவர்த்தி செய்யப்பட்ட நிலையில் சட்ட விதிகள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க, சிறப்புப் பிரிவை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

“குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் உரிமைகளைப் பாது காக்கும் நோக்கில், சட்டத்தின் விதிகள் செயல்படுத்தப்படுவதைக் கண்காணிக்கவும், மாநிலங் களின் தலைமைச் செயலாளர்கள் மூலம் அமலாக்க முகமைகளுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் ஒரு சிறப்புப் பிரிவை அமைக்குமாறு ஒன்றிய அரசுக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *