பெங்களூரு, நவ. 6- கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவகுமார் மற்றும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு மற்றும் குற்ற வியல் வழக்கைத் தள்ளுபடி செய்து அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
2023 சட்டமன்றத் தேர்தல் நேரத்தில் முந் தைய பாஜக அரசின்மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து விளம்பரங்கள் வெளியிட்டதற்காக, காங்கிரஸ் தலைவர்களான இவர்கள் இருவருக்கும் எதிராக பாஜக வழக்குத் தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி இருவரும் தாக்கல் செய்த மனுக்கள் விசாரணைக்கு வந்தன. இதனை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, இருவருக்கும் எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
குறிப்பிட்ட தனி நபர்கள் அல்லது அமைச் சரவை மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் அரசியல் கட்சியான பாஜக எப்படி அவதூறு வழக்குத் தொடரும் என்ற மனுதாரர்களின் வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
டி.கே.சிவகுமார், சித்தராமையாவுக்கு எதிராக பாஜக தொடர்ந்த அவதூறு வழக்கு தள்ளுபடி!
Leave a Comment
