இளம் தலைமுறையினரை இந்திய கல்வி அமைப்பு கைவிடுகிறது ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இணையவழி கையெழுத்து இயக்கம்

புதுடில்லி, செப். 12-  இந்தி யாவின் கல்வி அமைப்பு எந்த தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ அதே தலைமுறையை கைவிடுகிறது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் ‘மாணவர் குரல்’ என்ற பெயரில் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். ஏற்கெனவே ராஜஸ்தானின் கோட்டா, உத்தரகாண்ட்டின் டேராடூன், உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மகாராட்டிராவின் புனே ஆகிய நகரங்களில் மாணவர்களின் குரல் நிகழ்ச்சி மூலம் மாணவர்களைச் சந்தித்து அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார்.

இதன் தொடர்ச்சியாக வரும் 19-ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் நடை பெற உள்ள ‘மாணவர் குரல்’ நிகழ்ச்சியில் அவர் மாணவர் களைச் சந்திக்க இருக்கிறார்.

இந்நிலையில், ராகுல் காந்தி இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘இந்தியாவின் கல்வி அமைப்பு எந்த தலைமுறையை மேம்படுத்த உருவாக்கப்பட்டதோ, அந்த தலைமுறையை கை விடுகிறது. வினாத்தாள் கசிவு, தாங்க முடியாத கல்விக் கட்டணம், சிதிலமடைந்த உள்கட்டமைப்பு வசதிகள் என பல சிக்கல்கள் உள்ளன. லட்சக் கணக்கான இந்திய இளைஞர்கள் நேர்மையாக உழைத்தாலும் இந்த அமைப்பு அவர்களை ஏமாற்றவே செய்கிறது.

இதைச் சரிசெய்வதற்கான முதல் படி, இதன் குறைபாடுகளை அன்றாடம் அனுபவிப்பர்களின் கருத்துகளுக்கு செவிமடுப்பதே.

மாணவர்களே, பெற்றோர் களே, ஆசிரியர்களே… கல்வி அமைப்பின் மீதான நம்பிக் கையை நீங்கள் இழக்க காரணம் என்ன என்பதை என்னிடம் கூறுங்கள்.

இதற்கான https://rahulgandhi.in/awaazbharatki/chattronkigoonj என்ற இணைய இணைப்பின் வாயிலாக உங்கள் அனுபவங்கள், ஆதாரங்கள், யோசனைகள் ஆகியவற்றை நீங்கள் பகிர்ந்து கொள்ளலாம். நாம் இணைந்து நம்பிக்கையை மீண்டும் கொண்டு வருவோம்” என்று தெரிவித் துள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *