கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 5.11.2026

4 Min Read
- Advertisement -

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*மயிலாப்பூரில் புதிய சட்டமன்ற வளாகம்: அடிப்படை சாத்தியக்கூறு ஆய்வே நடத்தப்படவில்லை! ரூ.1,200 கோடி மதிப்பிலான புதிய சட்டமன்ற வளாக திட்டத்திற்கான இடத்தேர்வுக்கு முன், சாத்தியக்கூறு ஆய்வு அல்லது சுற்றுச் சூழல் மதிப்பீடு நடத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

*அக்னிபாத் திட்டத்தில் மாற்றம்: 6 ஆண்டுகளுக்குப் பிறகு அக்னி வீரர்கள் அனைவரும் ராணுவத்தில் நிரந்தரப் பணியில் இணைப்பு! அக்னிபாத் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றியவர்களில் 75% பேருக்கு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்கப்பட்டு, தேர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு நிரந்தர ராணுவப் பணியில் சேர வாய்ப்பு அளிக்க ஒன்றிய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

* தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் களுக்கான சட்டப் பாதுகாப்பு: ஒன்றிய அரசுக்கு உச்சநீதி மன்றம் நோட்டீஸ்! தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்களுக்கு வழக்குகளில் முழுமையான சட்டப் பாதுகாப்பு வழங்கும் 2023 சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

* நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: சீர்திருத்தக் குழுவிடம் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தல்! நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதால், நீட் ரத்து செய்யப்பட்டு, உயர் கல்வியில் சமவாய்ப்பும் சமூக நீதியும் உறுதி செய்யப்பட வேண்டும்.

* நீட் உள்ளிட்ட தேசிய நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்து, மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண்களையே அடிப்படைத் தகுதியாக கொள்ள வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

* துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கும் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள்: உயர் நீதிமன்றம் கவலை! தமிழ்நாட்டின் 14 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இன்றி, அரசு நியமித்த கன்வீனர் குழுக்கள் மூலம் இயங்குவது உயர் கல்வியின் செயல்பாட்டை பாதிக்கும் எனக் குறிப்பிட்ட உயர்நீதிமன்றம், உடனடி நடவடிக்கை எடுக்க அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* டிரம்ப்பின் அரசியல் கோட்டையைத் தகர்த்த ஜனநாயகக் கட்சியின் நீல அலை! அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் சிறுபான்மையினருக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி! அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய வம்சாவளியினரான அமி பேரா, ரோ கண்ணா, சுஹாஸ் சுப்ரமணியம், பிரமிளா ஜெயபால் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுச் சாதனை படைத்துள்ளனர்; பல்வேறு சிறுபான்மையினரும் முக்கியப் பதவிகளைக் கைப்பற்றியுள்ளனர்.

* அமெரிக்க செனட் சபையையும் கைப்பற்றிய ஜனநாயகக் கட்சி – டிரம்ப்புக்கு மிகப்பெரிய அரசியல் பின்னடைவு! ஈரான் போர், விலைவாசி உயர்வு மற்றும் டிரம்ப் அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிரான மக்களின் அதிருப்தியால், ஜனநாயகக் கட்சி செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை இரண்டிலும் வெற்றி பெற்று அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது.

* “எனக்கு ஞானேஷ் குமாரைத் தாருங்கள்!” – டிரம்ப்பை கிண்டல் செய்யும் இணைய மீம்ஸ்கள் வைரல்! அமெரிக்க தேர்தலில் டிரம்ப் சந்தித்த தோல்வியைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளையும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரையும் இணைத்து சமூக வலைதளங்களில் நையாண்டி மீம்ஸ்கள் பரவி வருகின்றன.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாக விவகாரம்: உயர்நீதி மன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை! அக்.30 அன்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்து, தமிழ்நாடு அரசு மற்றும் ஹிந்து சமய அறநிலையத்துறையின் பதிலைக் கோரியுள்ளது.

தி இந்து:

* புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட விதிமுறைகள்: ஒன்றிய அரசை காங்கிரஸ் கடுமையாக சாடியது! ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைதீர் வழிமுறைகள் பலவீனப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டிய ஜெய்ராம் ரமேஷ், உரிமை அடிப்படையிலான முக்கியச் சட்டத்தை நிர்வாகத் திட்டமாக அரசு சுருக்கி விட்டதாக விமர்சித்தார்.

* “தவெக அரசு ஒரு சர்க்கஸ்; பெருநிறுவனங்களின் கட்டுப் பாட்டில் இயங்குகிறது!” – மு.க.ஸ்டாலின் கண்டனம். கார்ப்பரேட் சக்தி மய்யங்களே தவெக அரசைக் கட்டுப் படுத்துவதாகவும், முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யை அவர்கள் தங்களது விருப்பப்படி ஆட்சி நடத்தப் பயன்படுத்துவதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தி டெலிகிராப்:

* எஸ்.அய்.ஆர் விவாதத்திற்கு பாஜக விடுத்த அழைப்பு:  நாடாளுமன்றத்தில் பேச அனுமதி மறுக்கப்படுவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு! எஸ்.அய்.ஆர். குறித்து விவாதிக்க யாரை வேண்டுமானாலும் நடுவராகத் தேர்வு செய்யலாம்; அத்வானி, மோகன் பகவத் அல்லது அதானியை கூட அமர்த்தலாம் எனக் கிண்டலாகக் கூறிய ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் தமக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்படுவதாக சாடினார்.

* “நண்பர் டொனால்டுக்கு ஞானு தேவை!” – தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கிண்டல் செய்த மஹுவா மொய்த்ரா! அமெரிக்க இடைக்காலத் தேர்தல் அரசியல் பின்னணியில், டிரம்ப்பை கிண்டல் செய்யும் வகையில் மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்; ஞானேஷ்குமார் டிரம்ப்புக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்க அனுமதித்திருக்க மாட்டார் எனவும் சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* நீட்-முதுநிலை தேர்வில் சதவீத முறைக்கு பதிலாக தரவரிசை அடிப்படையிலான தகுதிப் பட்டியல்! மருத்துவப் பட்ட மேற்படிப்பு மற்றும் உயர் சிறப்பு படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், பர்சன்டைல் முறையை நீக்கி ரேங்க் அடிப்படையில் சேர்க்கை நடத்த தேசிய மருத்துவ ஆணையம் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.

* “நாடாளுமன்றத்தின் மூன்றாவது அவையாக உச்சநீதிமன்றம் செயல்பட முடியாது!” எஸ்.சி., எஸ்.டி.  பிரிவினருக்கான சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதி இட ஒதுக்கீடு அளவு கோல்களில் தலையிடுவது சட்டமன்றத்தின் தனிப்பட்ட அதிகாரம் எனக் கூறிய உச்சநீதிமன்றம், அரசியலமைப்பு வரையறுத்த எல்லையை மீற முடியாது என்று தெரிவித்தது.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *