சைவம் – வைணவம் குறித்த கருத்து வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் க.பொன்முடி விடுவிப்பு!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 5– சைவம், வைணவம் குறித்து சர்ச்சை பேச்சு வழக்கில் இருந்து க.பொன்முடி விடுவித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக பாஜக பெண் கவுன்சிலர் தொடர்ந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டதால் க.பொன்முடியை விடுவித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் கடந்தாண்டு நிகழ்ச்சி ஒன்றில், அப்போதைய திமுக அமைச்சர் பொன்முடி, சைவம், வைணவம் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் அவர் அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிட்டது.

இந்நிலையில் அவருக்கு எதிராக பாஜக பெண் கவுன்சிலரான உமா ஆனந்தன், சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பின்னர் ஜார்ஜ் டவுனில் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான சிறு குற்ற வழக்குகளை விசாரி்க்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி பொன்முடி தாக்கல் செய்திருந்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இந்த வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சி.சுந்தரபாண்டியன் முன்பாக மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ‘முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது வயது மற்றும் உடல் நிலையைக் கருத்தில்கொண்டு அவருக்கு எதிரான வழக்கை திரும்பப் பெறுவதாக’ பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் மனு தாக்கல் செய்தார். அதையேற்ற நீதிபதி, வழக்கில் இருந்து பொன்முடியை விடுவித்து உத்தரவிட்டார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *