பெரியார் கண்ட ‘இனி வரும் உலகம்’ எப்படி இருக்கவேண்டும், எப்படி இருக்கும் என்பதை,
மிக அருமையாக நம்முடைய தளபதி, திராவிட நாயகர் சிறப்பாகச் செய்திருக்கிறார்!
காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்! திராவிடம் வாழும்! நூலகம் பெருகும்!
கோவை, நவ.5 பெரியார் கண்ட ‘இனி வரும் உலகம்’ எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும் என்பதை, மிக அருமையாக நம்மு டைய தளபதி, திராவிட நாயகர் சிறப்பாகச் செய்திருக்கிறார். என்னுடைய வாழ்நாளில், 94 வயதில், 84 ஆண்டுகள் பொதுவாழ்க்கையில், இப்படி ஓர் அரிய பொன்னான வாய்ப்பை நான் பெற்றதில்லை! காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்! திராவிடம் வாழும்! நூலகம் பெருகும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
தந்தை பெரியாரின் 148 ஆவது பிறந்த நாள் விழா – கோவையில் ‘பெரியார் அறிவுலகம்’ கண்ட திராவிட நாயகர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு விழா ஆகிய விழாக்களில் பங்கேற்க நேற்று (4.11.2026) கோவைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், பெரியார் அறிவுலகம் முன் திராவிட நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்களோடு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
செய்தியாளர்களிடையே
தமிழர் தலைவர் ஆசிரியர்
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
கோவையில், தந்தை பெரியார் அவர்கள் பெயரால், ‘பெரியார் அறிவுலகம்’ என்ற இந்த அறிவுலகத்திற்குள் சென்று வெளியே வரும்போது, வியப்பு மட்டுமல்ல, திகைப்பு மட்டுமல்ல, பெரிய சாதனை என்ற நிலைதான் தெரிகின்றது.
இன்றைய நாள் மிக முக்கியமான நாள். பெரியார் அறிவுலகத்தை உரு வாக்கியவர் இங்கே இருக்கிறார். அவரோடு நான் இருக்கிறேன்; அவரோடு இந்த அறிவுலகத்தைச் சுற்றிப் பார்த்து மகிழ்ந்திருக்கிறேன். இந்தச் சாதனை என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் வரலாறாக நிச்சயமாக நிலைத்திருக்கும்.
இது வெறும் நூலகம் மட்டுமல்ல; அறிவுலகம். நூலகமும் இருக்கிறது, அறிவியலும் இருக்கிறது. மூட நம்பிக்கைகளுக்கு இடங்கொடுக்காத அளவிற்கு, பெரியார் கண்ட ‘இனி வரும் உலகம்’ எப்படி இருக்க வேண்டும், எப்படி இருக்கும் என்பதை, மிக அருமையாக நம்மு டைய தளபதி, திராவிட நாயகர் சிறப்பாகச் செய்திருக்கிறார்.
என்னுடைய வாழ்நாளில், 94 வயதில், 84 ஆண்டுகள் பொது வாழ்க்கையில், இப்படி ஓர் அரிய பொன்னான வாய்ப்பை நான் பெற்றதில்லை.
ஆகவே, அவருக்குக் கோடானு கோடி நன்றியை, உலகமெங்கும் இருக்கின்ற அத்துணை பேரின் சார்பிலும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டு இருக்கிறோம்.
இந்த அறிவுலகம் பரவட்டும்; அறியாமை வீழட்டும்! அது மட்டு மல்ல, புரியாமை, அறியாமை விலகி, ஜாதி மத பேதங்கள் இல்லா மல், எல்லோரும் வருகின்ற இடம் இதுதான்.
ஆகவே, இதை நிர்மாணித்தவ ருக்கு எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை!
காலமெல்லாம் ஸ்டாலின் வாழ்வார்!
திராவிடம் வாழும்!
நூலகம் பெருகும்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்க ளுக்குப் பேட்டியளித்தார்.
