டில்லியில் காற்றுமாசை எதிர்கொள்ள மேம்படுத்தப்பட்ட 2-ஆம் கட்ட செயல் திட்டம் அமல்!

- Advertisement -

புதுடில்லி, நவ.4- டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், மேம்படுத்தப்பட்ட 2-ஆம் கட்ட செயல் திட்டம் அமல் படுத்தப்பட்டது.

டில்லியில் குளிர்காலம் நெருங் கக்கூடிய சூழலில், காற்று மாசு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவை விட காற்றில் மாசு அதிகரித்து பொதுமக்களுக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. பல ஆண்டுகளாக இந்த நிலை நீடித்து வருகிறது.

இந்த சூழலில், டில்லியில் மாசுக் கட்டுப்பாட்டை குறைக்க முதலமைச்சர் ரேகா குப்தா தலைமையிலான அரசு பல வழிமுறைகளை கையாண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோன்று, டில்லியில் மாசுக் கட்டுப்பாட்டு சான்றிதழ் இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கக்கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருந்தது. இது கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

டில்லியில் காற்று மாசு அதிகரிப்புக்கு வாகனங்கள் வெளியேற்றும் மாசுக்களும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது. அதனால், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங் களுக்கு டில்லியில் அனுமதி இல்லை. இந்த நடைமுறை நவம்பர் 1-ஆம் தேதி முதல் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது.

பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்பட்ட வாகனங்களாக இருந்த போதும், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ்களையும் உடன் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், டில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவுக்கு சென்றுள்ளது. கடந்த 31-ஆம் தேதி 117 ஆக இருந்த காற்றின் தரக்குறியீடு, நேற்று முன்தினம் 261 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று மேலும் அதிகரித்து 324 ஆனது. டில்லியில் காற்று மாசு அதிகரித்துள்ள சூழலில், மேம்படுத்தப்பட்ட 2-ஆம் கட்ட செயல் திட்டம் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த செயல்திட்டம், அத்தியாவசிய தேவையின்றி ஜெனரேட்டர்கள் இயக்குவதை தடை செய்கிறது.

அதுபோல விறகு அடுப்பு, நிலக்கரி அடுப்புகள் பயன் படுத்துவதையும் தடுக்கிறது. கட்டுமானப் பணிகள், வாகனங்களுக்கான மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற வற்றுக்கு உள்ள கட்டுப்பாடுகள் அப்படியே தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, சிங்கு எல் லையில், பி.எஸ்.6 தர நிர்ணயத்திற்கு உட்படாத வாகனங்களை நிறுத்தி, திருப்பி அனுப்பும் பணியும் நடந்து வருகிறது. இதில், 1-ஆம் தேதி மட்டும் 7,279 வாகனங்களை காவல்துறையினர் சோதனை செய்தனர். அவற்றில் 714 வாகனங்கள் திருப்பி அனுப்பப் பட்டு உள்ளன.

இந்த பணிக்காக அச்சு, சமூக ஊடகங்களை டில்லி காவல் துறயினர் பயன்படுத்தி வருவதுடன், டில்லி எல்லையில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டு உள்ளன. துண்டுப் பிரசுரங்களும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *