தீண்டாமை வன்கொடுமை-மூத்த காங்கிரஸ் கட்சி தேசியத்தலைவர் அவமதிப்பு! கருநாடக மாநிலத் திராவிடர் கழகம் கண்டனம்!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக. 24- அகிய இந்திய காங்கிரஸ், கட்சி மூத்தத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்ட உத்தரகாண்ட் மாநில கூட்டத்தில் பேசிய பின்னர் கலைந்து சென்ற இடத்தினை சுத்தம் செய்து விட்டு, கங்கையில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து, அந்த இடத்தில் தெளித்து தீமூட்டி யாகம் வளர்த்துள்ளனர்.

இதனை மதவாத அமைப்பான சிறீராமசேனா செய்துள்ளனர். இது பெரும் குற்றச் செயலாகும்.

இந்தியா சுதந்திரம் பெற்று 72 ஆண்டுகள் கடந்த பின்பும். தீண்டாமை எனும் கொடும் குற்றத்தினை, இந்தியாவை ஆளும் பாரதிய ஜனதா இயக்கத்தின் துணை அமைப்பு மேற்கண்ட கொடுமையை மூத்த தேசிய தலைவருக்கு செய்துள்ள கொடும் செயலை வன்மையாக கண்டிக்கத் தக்கசெயலாகும். குற்றச் செயலில் ஈடுபட்ட அமைப்பினர் மீது தக்க சட்டரீதியான நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற கொடும் செயல்கள் நடக்காத வண்ணம் மாநில அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென ‘கருநாடக மாநிலம் திராவிடர் கழகம்’ தெரிவித்துக் கொள்கிறது.

சாம்ராஜ் நகரில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு கண்டனம்

பெங்களூரு, ஆக. 24- கருநாடக மாநிலம் சாம்ராஜ் நகர் வனப்பகுதியில் மூன்று தமிழர்கள் மாடு மேய்த்துக் கொண்டிருந்த போது, வனத்துறையினரால் துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளனர். அதனை கடுமையான கண்டனத்தினை கருநாடக மாநிலத் திராவிடர் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

அந்தோணிசாமி, ஜான் ரோஸ் பீட்டர் மற்றும் செபஸ்டின் டேவிட் குமார் ஆகிய மூவரும் கால்நடைகள் மேய்க்கச் சென்ற மூன்று தமிழர்களையும், எந்தவித எச்சரிக்கையும் இல்லாமல் சுட்டு கொன்றுள்ளனர். அவர்களை கைது செய்து சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் சுட்டுக்கொள்வது எந்த வகையான நியாயமாகும் ? இது மனித இனத்திற்கு முற்றிலும் கொடுமைமிகு கடும் செயலாகும். இதனை கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் இழப்பீடும், துறை ரீதியான சட்ட பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கேட்டுக் கொள்கிறோம் என கருநாடக மாநில திராவிடர் கழகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *