சென்னை, நவ. 4- கைதிகள் தப்பிய விவகாரத்தை அடுத்து, சிறை களில் பாதுகாப்பை ஆய்வு செய்ய காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஜே.கே.திரிபாதி தலை மையில் உயர்நிலைக் குழுவை அமைத்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 2.11.2026 அன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:
தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் அண்மையில் தப்பிச் சென்ற நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாடு சிறைகளில் நிலவும் பாது காப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்தேன்.
இந்த ஆய்வின்போது பெறப்பட்ட கருத்துகள், விவரங்களின் அடிப்ப டையில், கைதிகள் தப்பிச் சென்ற நிகழ்வுகளுக்குக் காரணமான பாது காப்பு குறைபாடுகள் குறித்து விரிவான விசாரணை நடத்தவும், தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறைகளின் பாது காப்பை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கவும், நாட்டின் பிற பகுதிகளிலும், வெளி நாடுகளிலும் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வு கள் நிகழாமல் தடுப்பதற்கான நட வடிக்கைகளை மேற்கொள்ளவும் உயர்நிலைக் குழு ஒன்றை அமைக்க உத்தரவிட்டுள்ளேன்.
சட்டம் – ஒழுங்கு காவல்துறை முன்னாள் தலைமை இயக்குநர் ஜே.கே திரிபாதி (ஓய்வு) இதன் தலை வராகவும், தற்போதைய சிறைகள், சீர்திருத்தப் பணிகள் துறையின் இயக்குநரான கூடுதல் தலைமை இயக்குநர் கே.சங்கர் மற்றும் சிறைத் துறை முன்னாள் துணைத் தலைவர் (டிஅய்ஜி) எஸ்.ராஜேந்திரன் (ஓய்வு) ஆகியோர் உறுப்பினர்களாகவும் இருப்பார்கள்.
கைதிகள் தப்பிச் சென்ற நிகழ்வு களுக்கு வழிவகுத்த பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விரிவாக விசாரணை நடத்தி, தற்போதுள்ள பாதுகாப்பு கட்டமைப்பு, சிறையின் பாதுகாப்புக்கு அவ்வப்போது பிறப்பிக்கப்படும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள், தொழில்நுட்ப இடைவெளிகள், பணிச்சுமைக்கு ஏற்ப போதுமான அளவில் பாதுகாப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இக்குழு ஆய்வு செய்யும்.
வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் பின்பற்றப்படும் சிறந்த நடைமுறைகளின் அடிப்படையில், மாநிலத்தில் உள்ள சிறைகளின் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கான விரிவான நடவடிக்கைகள் அடங்கிய பரிந்துரை அறிக்கையை இக்குழு அரசுக்கு அளிக்கும்.
போர்க்கால அடிப்படையில் சிறைகளின் பாதுகாப்பு வலுப்ப டுத்தப்பட வேண்டும். பணியில் கவனக்குறைவாக செயல்படும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு முதலமைச்சர் தெரி வித்துள்ளார்.
