மாணவர்கள் போராட்டம் குறித்து தவறான சுற்றறிக்கை! சட்டப் பேரவையில் மன்னிப்புக் கோரினார் அமைச்சர் விஸ்வநாதன்

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஆக. 25- மாணவர்கள் போராட்டம் தொடர்பாக சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரத்தில் உயர்கல்வி அமைச்சர் விஸ்வநாதன் முழுப் பொறுப்பேற்று சட்டப்பேரவையில் மன்னிப்பு கோரினார்.

தமிழ்நாடு சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் செல்லசுவாமி பேசும்போது, ‘‘கம்யூனிஸ்ட் மாணவர் இயக்கங்கள், கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைக் குறிவைத்து கடந்த ஜூலை 28ஆம் தேதி தலைமைச் செயலர் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டு, உயர்கல்வி, பள்ளிக்கல்வி துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.

இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாக கூறுகிறார்கள். இதில் தொடர்புடைய அதிகாரி களை பணியிடைநீக்கம் செய்ய வேண்டும்’’ என்றார்.

அதற்கு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வ நாதன் பதிலளித்துப் பேசும்போது, ‘‘இந்த விவகாரத்தில் துறையின் செயலர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது.

அதேபோல், அமைச்சர் எனும் முறையில் முழுப் பொறுப்பேற்று எனது மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்.

துறைரீதியாக இந்த தகவலை அனுப்பிய அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாகவும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்த விளக்கம் கிடைத்தவுடன் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *