ஆயில் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகப் பிரிவில் காலியாக உள்ள கிரேடு ‘ஏ, பி’ மற்றும் சி’ நிலை பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் வரும் நவ.14 ஆம் தேதிக்குள் இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு எண்.: HRAQ/REC-EX-B/2026-03
பணி: சூப்பரெண்டென்டிங் ரிசர்ச் சயன்டிஸ்ட்
காலியிடங்கள்: 5
தகுதி: வேதியியல், புவியியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் கெமிக்கல், பெட்ரோலியம் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றிருப்பதுடன் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.80,000 – 2,20,000
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் ஆஃபீசர் (மெக்கானிக்கல்)
காலியிடங்கள்: 14
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 65 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் ஆஃபீசர் (டெட்ரோலியம்)
காலியிடங்கள்: 4
தகுதி: பொறியியல் துறையில் பெட்ரோலியம் பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
வயதுவரம்பு: 29-க்குள் இருக்க வேண்டும்.
பணி: சீனியர் அக்கவுண்ட்ஸ் ஆஃபீசர் / சீனியர் இன்டேர்னல் ஆடிட்டர்
காலியிடங்கள்: 6
தகுதி: அய்சிஏஅய், அப்சிஎம்ஏஅய் அமைப்பில் அசோசியேட் மெம்பராக இருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
பணி: ஹிந்தி ஆஃபீசர் (அலுவலக மொழி)
காலியிடங்கள்: 2
தகுதி: ஹிந்தி பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.50,000 – 1,60,000
வயதுவரம்பு: 37-க்குள் இருக்க வேண்டும்.
பணி: கான்பிடென்சியல் செக்ரட்டரி
காலியிடங்கள்: 1(PWD)
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருப்பதுடன் செக்ரட்ரியல் பிராக்டிஸ்-இல் இரண்டு ஆண்டு டிப்ளமோ தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்: மாதம் ரூ.60,000 – 1,80,000
வயதுவரம்பு: 27-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயதுவரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினர்களுக்கு 3 ஆண்டுகளும் சலுகை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500. கட்டணத்தை இணைய வழி மூலம் செலுத்த வேண்டும். இதர பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.oil-india.com என்ற இணையதளம் மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.11.2026
