பெங்களூருவில் பெரியார்-அண்ணா-கலைஞர் பிறந்த நாள் முப்பெரும் எழுச்சி விழா!

1 Min Read
- Advertisement -

பெங்களூரு, நவ. 3– பெங்களூரு சிறீராம்புரம் பகுதியில் இயங்கி வரும் திருவள்ளுவர் சங்கத்தின் சார்பில் 25.10.2026 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளுவர் சங்கத் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் தலைமையில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகி யோர் பிறந்த நாள் முப் பெரும் எழுச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.

திருவள்ளுவர் சங்கச் செயலாளர் பிரபாக ரன் வரவேற்புரை ஆற்றி னார். கருநாடக மாநில கழகக் காப்பாளர் மு.சானகிராமன், மாநிலத் தலைவர் வழக்குரைஞர் கே.குணவேந்தன், பெரியார் குறித்து சிறப்பான உரை நிகழ்த்தினார். திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளான போர்முரசு கதிரவன், மாநில பொதுக்குழு உறுப்பினரும், தொழிற்சங்க தலைவரு மான ந.இராமசாமி மூவேந்தர்களைக் குறித்து நெடிய நேரம் எழுச்சி மிகு கருத்துரை வழங்கினார். மற்றும் பலர் கருத்துகளை வழங்கினார்கள்.

வண்ணமிகு பதா கையில் திருவள்ளு வர், பெரியார், அண்ணா, கலைஞர் ஒளிப் படங்கள் காட்சிப்படுத் தப்பட்டிருந்தன. திரு வள்ளுவர் சிலை, தந்தை பெரியார், கலை ஞர் ஆகியோரின் ஒளிப் படங்களுக்கு மலர் மாலை கள் அணிவித்து சிறப்பு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்வில் கலந்து கொண்டு சிறப் பான கருத்துரை வழங்கியோ ருக்கு திருவள்ளுவர் கழகத் தலைவர் முனைவர் எஸ்.டி.குமார் பயனாடைகள் அணிவித்து நினைவுக் கேடயம் வழங்கி சிறப்புச செய்தார். நிகழ்வில் ஏராளமான சங்க உறுப்பி னர்களும், மகளிரும் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *