தனியார் மயமாக்குவதற்குப் பதிலாக இஸ்ரோவை வலுப்படுத்த வேண்டும்! இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 3– இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் இஸ்ரோவின் சாதனை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் அறிக்கையில் தெரிவித்திருப் பதாவது,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் என்விஎஸ்-03 செயற் கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட்டை வெற்றிகர மாக விண்ணில் செலுத்தியுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட அணுக் கடிகாரம் மற்றும் மேம்படுத்தப்பட்ட திறன்களுடன் என்விஎஸ்-03 செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்கெட் மூலம் நிலைநிறுத்தப்பட்டது இஸ்ரோவின் மகத்தான சாதனை யாகும். இதில் உள்ள நேவிக் அமைப்பு நாட்டின் ரயில்கள், வாகனங்கள் மற்றும் கப்பல்களை நேரலையில் கண்காணிக்கும் பொது பயன்பாடுகளுக்கு உதவுவதுடன், இந்தியா மற்றும் அதை சுற்றியுள்ள 1500 கிமீ பரப்பளவுக்கு வழிகாட்டுதல் சேவையையும் வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மகத்தான சாதனையை நிகழ்த்திய இஸ்ரோ தலைமைக்கும், அறிவியலாளர்களுக்கும், தொழில் நுட்ப நிபுணர்களுக்கும் வாழ்த் துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

விண்வெளி ஆராய்ச்சிக்கு வித்திட்ட இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இஸ்ரோவை உருவாக்குவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மகத்தான பங்கை செலுத்திய அறிவியலா ளர்கள் விக்ரம் சாராபாய், அப்துல் கலாம் போன்றோரின் கனவுகள் மெய்ப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விண்வெளி ஆராய்ச்சியையும், ராக்கெட் ஏவுதலையும் இந்திய அரசு தனியார் மயமாக்குவது கண்ட னத்துக்குரியது. இதற்கு பதிலாக இஸ்ரோவை மேலும் வலுப்படுத்த வேண்டும். இஸ்ரோவுக்கு தேவை யான நிதி உதவி உட்பட அனைத்து உதவிகளையும் ஒன்றிய அரசு செய்ய முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *