மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டம்!

1 Min Read
- Advertisement -

மதுரை, நவ. 3- மதுரை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், மருத்துவமனையில் பணிகள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உள் மருத்துவப் பயனாளிகளும், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மருத்துவப் பயனாளிகளும் நாள்தோறும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தப் பணியாளர்கள் 750-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், மருத்துவமனையில் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த அக்டோபர் மாதம் மருத்துவமனை வளாகத்தில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், மருத்துவமனை டீன் அருள் சுந்தரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஒப்பந்தப் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு, வார விடுமுறை வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைவருக்கும் ஊதிய விவரச் சீட்டு மாதந்தோறும் வழங்கப்படும், பிடித்தம் செய்யப்படும் பணம் குறித்த விவரம் தெரிவிக்கப்படும், நாள்தோறும் 8 மணி நேர வேலை மட்டுமே வழங்கப்படும் எனக் கூறப்பட்டது.

ஆனால், இந்த கோரிக்கைகள் எதுவும் இந்த மாதத்தில் நிறைவேற்றப்படாததால், தனியார் நிறுவன ஒப்பந்தப் பணியாளர்கள் மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் நேற்று (2.11.2026) காலை முதல் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து ஒரு பணியாளர் கூறுகையில், எங்களுக்கு நாள்தோறும் வழங்கும் ஊதியம் ரூ.710 முழுமையாக கிடைக்க வேண்டும்.

எங்கள் ஊதியத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் முன்பணமாக வழங்க வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை நிறைவேற்றினாலே நாங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை விட்டுவிட்டு எங்கள் பணிகளுக்குச் செல்வோம். இல்லாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம். இது குறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினர். பணியாளர்கள் போராட்டத்தால், மருத்தவமனையில் தூய்மைப் பணிகள், மருத்துவப் பயனாளிகளின் வீல் சேர் தள்ளுதல் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *