பட்டினப்பாக்கத்தில் குடியிருப்புகளை இடிக்க ஒப்பந்தம் கோரியது த.வெ.க. அரசு!

1 Min Read
- Advertisement -

சென்னை, நவ.3- சென்னை பட்டினப் பாக்கத்தில், புதிய தலைமைச் செயலகம் அமைக்க அரசாணை வெளியிடப்பட்ட நிலையில், அங்குள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளை இடிக்க தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியிருக்கிறது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சிதிலமடைந்த வீட்டு வசதி வாரியத்தின் 96 குடியிருப்புகளை இடிக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் இன்றைய தேதியிட்ட ஒப்பந்தத்தில், பட்டினப்பாக்கத்தில் உள்ள 96 பழைய குடியிருப்புகளை இடிக்கும் பணிக்கு ‘இ-டெண்டர்’ விடப்பட்டுள்ளது. இதற்கு இ-ஏல முறையில் ஒப்பந்தம் கோரும் நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு, டிசம்பர் 1ஆம் தேதி காலை 11 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை பட்டினப்பாக்கத்தில் சுமார் 25 ஏக்கரில் சட்டப்பேரவை வளாகத்துடன் புதிய தலைமைச் செயலகம் அமையவிருக்கிறது.

முன்னதாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என அரசு அறிவித்த நிலையில், அதற்கான 21.37 ஏக்கர் இடத்தை, நிலவகைப்பாடு மாற்றி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) அனுமதி அளித்திருந்தது.

கருத்துக்கேட்புக் கூட்டம்

மீன்வளத்துறை சார்பில், மீனவ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளை நேற்று (2.11.2026) கைபேசியில் அழைத்து, இன்று (நவ.3) ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில், புதிய தலைமைச் செயலகம் அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.

அதில் ஒவ்வொரு அமைப்பின் ஓரிரு பிரதிநிதிகள் மட்டும் வந்து பங்கேற்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புறக்கணிப்பு

எழுத்துப்பூர்வமான அழைப்பு வராத நிலையில் மயிலை பகுதி அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்து சபை சார்பில், கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்க இயலாது என நேற்று கடிதம் அளித்துள்ளதாக நெய்தல் மக்கள் கட்சி தலைவர் கு.பாரதி தெரிவித்துள்ளார்.

கருத்துக்கேட்பு கூட்டத்திற்கு வாய்மொழி அழைப்பு விடுத்துவிட்டு நேற்றே (2.11.2026) கட்டடத்தை இடிக்க ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்ட போக்கு மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *