ஊடுருவல்காரர்கள் என யாரைச் சொல்கிறீர்கள்? – நிதின் நவீனுக்கு ப.சிதம்பரம் கேள்வி

2 Min Read
- Advertisement -

புதுடில்லி, நவ. 3- “மூன்று கோடி ஊடுருவல்காரர்கள் குறித்து 1.11.2026 அன்று நீங்கள் பேசி இருந்தீர்கள். அவர்கள் யார்? அவர்கள் குறித்த விவரங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசு களிடம் உள்ளதா?” என்று பாஜக தலைவர் நிதின் நவீனுக்கு ஒன்றிய மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நவீனுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளது, முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான ப.சிதம்பரம். இது தொடர்பாக ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அதில் கூறியதாவது:

“பா.ஜ.க. தலைவருக்கு சில கேள்விகளை முன் வைக்க விரும்புகிறேன்:

மூன்று கோடி ஊடுருவல்காரர்கள் குறித்து 1.11.2026 அன்று நீங்கள் பேசி இருந்தீர்கள். அவர்கள் யார்? அவர்கள் குறித்த விவரங்கள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளிடம் உள்ளதா?

ஊடுருவல்காரர்கள் யார் என்பதை அரியானா மக்கள் அறிவார்கள் என்று கூறினீர்கள். அப்படியென்றால் அது குறித்து அரியானா மாநில அரசும் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? அவர்களது பெயரை வெளியிடாமல், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அரசு மவுனம் காப்பது ஏன்?

ஊடுருவல்காரர்களை யாரும் பாதுகாக்கவில்லை. அத னால் அவர்களை அடையாளம் கண்டு, சட்டப்படி நட வடிக்கை எடுக்கலாம்.

ஊடுருவல்காரர்கள் மூன்று கோடி பேர் என்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து ஏன் 13.30 கோடி பேரை நீக்கினீர்கள்?

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப் போராட்டம் மூலம் தங்கள் வாக்குரிமையை மீண்டும் பெற்றவர்களும் ஊடுருவல்காரர்கள் என்று சொல்வீர்களா?” என பதிவிட்டுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டில்லி ராம்லீலா மைதானத்தில் 1.11.2026 ‘இண்டியா’ கூட்டணி சார்பில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக அரியானாவின் ரோத்தக் நகரில் பா.ஜ.க.வின் சார்பில் ‘ஜனநாயகத்தைக் காப்போம், அராஜகத்தை அகற்றுவோம்’’ என்கிற பெயரில் பேரணி நடத்தப்பட்டது. இதில் பா.ஜ.க. தேசியத் தலைவர் நிதின் நவீன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் ப.சிதம்பரம் இப்போது கேள்வி எழுப்பியுள்ளார் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *