லக்னோ, நவ.3 அயோத்தி ராமன் கோவில் நன்கொடை திருடு போன விவகாரத்தில் சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிடக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வு முன்பு நேற்று (2.11.2026) விசார ணைக்கு வந்தன.
சொலிசிட்டர் ஜெனரல்
துஷார் மேத்தா
அப்போது, உத்தரப்பிரதேச அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘அயோத்தி நீதிமன்றத்தில் சிறப்புப் புலனாய்வுக் குழு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. நன்கொடை எண்ணும் பணியின்போது நன் கொடை திருடப்பட்டதைக் கண்டு பிடித்துள்ளது’’ என்று கூறினார்.
கருத்தும் கூற விரும்பவில்லை!
அதை பதிவு செய்த நீதிபதிகள், ‘‘அயோத்தி நீதிமன்றம், விசாரணை யைப் பார்த்துக் கொள்ளும். மனு தாரர்கள் அந்த நீதிமன்றத்திற்கு உதவ வேண்டும். வழக்கின் தகுதி குறித்து நாங்கள் கருத்தும் கூற விரும்பவில்லை’’ என்று கூறி, மனுக்களை முடித்து வைத்தனர்.
