கடவுள் சிலைக்கு சக்தி ஏது? அம்பத்தூரில் கோயில் உண்டியலை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் திருட்டு!

1 Min Read
- Advertisement -

ஆவடி நவ. 3- அம்பத்தூர் தொழிற் பேட்டை, வாவின் சிக்னல் சந்திப்பு அருகில் சிறீ நாகவல்லி அம்மன் கோயில் அமைந்துள்ளது.

கடந்த அக்.31 ஆம் தேதி இரவு பூஜை முடிந்து, அர்ச்சகர் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். அவர் 1.11.2026 காலை மீண்டும் கோயிலைத் திறந்து உள்ளே சென்றபோது, அங்குள்ள ஜன்னலின் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்தது. அடை யாளம் தெரியாத நபர்கள் அதன்வழியாக உள்ளே புகுந்து உண்டியலை உடைத்து, அதிலிருந்த சுமார் ஒரு லட்சம் ரூபாய் மற்றும் கருவறை கதவை உடைத்து உள்ளே சென்று 4 கிராம் அம்மன் தாலி யைத் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து, கோயில் நிர்வாகி அளித்த புகாரின் பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருடியவர்களைத் தேடி வருகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *