ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு நிதிப் பகிர்வு! பா.ஜ.க. ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி! பிற மாநிலங்களுக்கு அநீதி!

- Advertisement -

புதுடில்லி, நவ. 2- மாநிலங்களின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளைக் கருத்தில் கொண்டு, ஒன்றிய அரசு நேற்று முன்தினம் (31.10.2026) மாநிலங்களுக்கான கூடுதல் வரிப் பகிர்வாக ரூ. 1,09,019 கோடியை விடுவித்துள்ளது.

தற்போதைய நடைமுறைப்படி, ஒரு நிதியாண்டில் ஒன்றிய அரசு வசூலிக்கும் மொத்த வரியில் 41 சதவீதம் 14 தவணைகளாக மாநிலங்களுக்குப் பிரித்தளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நிகழாண்டில் வழக்கமான வரிப் பகிர்வை அளித்ததைத் தொடர்ந்து, தற்போது இரண்டாவது முறையாகக் கூடுதலாக இந்தத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் உத்தரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அள்ளிகொடுத்து பாஜக ஆளாத மாநிலங்களை வஞ்சித்துள்ளது.

இந்த கூடுதல் வரிப் பகிர்வில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு ரூ. 19,208 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு ரூ. 4,466 கோடி பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கே கூடுதல் வரிப் பகிர்வு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. மாநில வாரியாகப் பகிர்ந்தளிக்கப்பட்ட வரிப் பகிர்வு:

உத்தரப் பிரதேசம் ரூ.19,208 கோடி, பீகார் ரூ. 10,845 கோடி, மத்தியப் பிரதேசம்  ரூ.8,010 கோடி, மேற்கு வங்கம்
ரூ.7,866 கோடி, மகாராட்டிரம்
ரூ.7,022 கோடி, ராஜஸ்தான்
ரூ.6,460 கோடி, ஒடிசா ரூ.4,819 கோடி, ஆந்திர பிரதேசம் ரூ.4,597 கோடி, கருநாடகம்
ரூ.4,504 கோடி, தமிழ்நாடு ரூ.4,466 கோடி, குஜராத் ரூ.4,094 கோடி, ஜார்க்கண்ட் ரூ.3,660 கோடி, சத்தீஸ்கர் ரூ.3,602 கோடி, அசாம் ரூ.3,552 கோடி, கேரளம் ரூ.2,597 கோடி, தெலங்கானா
ரூ.2,370 கோடி, பஞ்சாப் ரூ.2,176 கோடி, அரியானா ரூ.1,484 கோடி, அருணாசலப் பிரதேசம்
ரூ.1,476 கோடி, உத்தரகாண்ட்
ரூ.1,244 கோடி, இமாசலப் பிரதேசம்
ரூ.996 கோடி, திரிபுரா ரூ.699 கோடி, மேகாலயா ரூ.688 கோடி, மணிப்பூர் ரூ.682 கோடி, மிசோரம் ரூ.615 கோடி, நாகாலாந்து ரூ.524 கோடி, கோவா ரூ.398 கோடி, சிக்கிம் ரூ.365 கோடி.

விழாக் காலத்தில் நிதிப் புழக்கத்தை அதிகரிக்கவும், மாநிலங்களின் உட்கட்டமைப்பு மற்றும் நலத்திட்டப் பணிகளை விரைவுபடுத்தவும் இந்த கூடுதல் வரிப் பகிர்வு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *